0

Enter your keyword

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

திராவிடம் என்னவெல்லாம் செய்தது என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டாமா? முதன்முதலில் திராவிடக் கட்சியின் ஆட்சி, காங்கிரஸ் அரசை வென்று  1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைகின்றது. அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது. முதலமைச்சர் அண்ணா அவர்களால் 1968-ஆம் […]

உலகத் தமிழ் படிப்பு!

உலகத் தமிழ் படிப்பு!

நமது தமிழ்மொழியையும் அதன் சிறப்புக்களையும் நாம், தமிழ் பல்கலைக்கழகங்களின் மூலமாகப் படித்து அறிந்து கொள்ளக்கூடிய வசதி தமிழகத்தில் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அத்தகைய பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றது என்பது நமக்குத் தெரியுமா? இந்தியா மட்டும் அல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோமா? இல்லை, என்பதே பதிலாக வரும்! அதற்காகத் தான் இந்தப் பதிவு. இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்துப் எழுதப்பட்டிருக்கும் பதிவு என்றாலும், இதனைக் காணும் பொழுது […]

மெட்ராஸ் தினம்!

மெட்ராஸ் தினம்!

இன்று சென்னையின் 382 ஆவது பிறந்தநாள்! முதலில் மதராஸ் மாகாணம் பிறகு மெட்ராஸ் ஆக மாறி இன்று சென்னையாக கம்பீரமாக நிற்கிறது! சென்னைக்கும் திராவிடத்திற்கு மிகப்பெரிய தொடர்பு உண்டு! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது சென்னையில் தான். திராவிட கட்சிகள் சென்னையில் உருவாவதற்கு இதுதான் அச்சாணி. நீதிக்கட்சி ஆரம்பித்தது சென்னையில் தான்! அதன் நீட்சியாக அரசியல் இயக்கமாக பின்னாளில் பல திராவிடக்  கட்சிகள் உருவானாலும் இன்று ஆண்டுகொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் சென்னையில் இருக்கும் […]

கு. வெ. கி.ஆசான்!

கு. வெ. கி.ஆசான்!

தமிழ் தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னை சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல் கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவராகவும் திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பல்வேறு திராவிட இயக்கங்களில் பல பொறுப்புகளையும் ஏற்றுத்   திறம்பட பணியாற்றியவர்தான் கு. வெ. கி.ஆசான். திராவிட இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இவர் பெயர் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஆனால் சாமானிய மக்களுக்கும் இந்தக் கால இளைஞர்களுக்கும் இவரை […]

தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!

தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!

வைதேகி ஹெர்பர்ட் வைதேகி ஹெர்பர்ட்!! இந்தப் பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நூற்றில் 99 பெயருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் இவர் சினிமாவில், மாடலிங் துறையில் அல்லது அரசியலில் இல்லை. இவர் அப்படி என்ன செய்தார் இவரை தெரிந்து வைத்துக் கொள்வதற்கு? நமது சங்க இலக்கிய நூல்கள் 18-ஐ மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார். மொழிபெயர்ப்புதானே செய்தார், இலக்கியங்களை எழுதிவிடவில்லையே என்று சில அதிமேதாவிகள் கேட்கலாம். ஆனால் சங்க இலக்கியமே தமிழின் அடிப்படை இலக்கியம்  அதில் இன்றைக்கு புழக்கத்தில் இல்லாத […]

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

இங்கு நடக்கும் பல வலதுசாரி கூட்டங்களில், மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாரத மாதா கி ஜே , வந்தேமாதரம் என்று குரல் எழுப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இன்று பல இளைஞர்கள், இளைஞிகள் ‘ஜி’ என்று அடைமொழியாகச் சேர்த்து பேசுவதை நாம் காணமுடிகிறது. எதற்கெடுத்தாலும் ஜி! எங்கு பார்த்தாலும் ‘ஜி’. அதை மரியாதை நிமித்தமாகக் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் வடமொழிச் சொல்லான ‘ஜி’ நமக்கெதற்கு? இப்படி விவகாரத்திற்கு இடமான பேச்சுகளைப் பற்றியும், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கே […]

ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியத்தின் படையெடுப்பினால் திராவிட மக்களின் பண்பாடு, விழாக்கள் என்று  பல விடயங்கள் இன்று ஆரிய மயமாகிப் போய் இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஏற்கனவே வடமொழிச் சொற்களின் கலப்பு ஆரியத்தின் பண்பாட்டு படையெடுப்பினால் எப்படி தமிழைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதைக் கடந்த கட்டுரையில் கண்டோம். இதேபோல் ஆரியம் நமக்கே  தெரியாமல் எவ்வாறு திராவிட மக்களின் அனைத்து விடயங்களிலும் இரண்டறக் கலந்து விட்டது என்று பார்ப்போம். வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களையும், கடவுள்களையும் நமது மனதில் […]

கலப்பில்லா தமிழ் பேசுவோம்!

கலப்பில்லா தமிழ் பேசுவோம்!

இன்று நாம் வழக்கில் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் மொழியும், அதன் எழுத்துக்களும் பல கால உருமாற்றத்தைக் கடந்து வந்துள்ளது. ஆனால் அதில் இருக்கும் பல சொற்கள் சமஸ்கிருத சொற்கள் என்பதை அறியாமலேயே இன்றளவும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம்! சரி, சமஸ்கிருத சொல்லாக இருக்கட்டுமே! இப்போது என்ன அதற்கு என்கிறீர்களா? இருந்துவிட்டு போகட்டும் என்று நாம் ஏன் விடக்கூடாது என்றால் இப்படி நாம் பயன்படுத்தும் சமஸ்கிருதச் சொற்களுக்கான பொருள் தமிழில் கிடையாது. சமஸ்கிருதத்தில் தான் நமக்குக் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அச்சொற்களுக்குப் பொருள் […]

பெரியாரும் தமிழும் !!!

பெரியாரும் தமிழும் !!!

பகுத்தறிவு பகலவனின் மொழி சீர்திருத்தம் தமிழ் மொழியை எப்படி பார்த்தார் பெரியார்? தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன்தான் பார்த்தார். தமிழ் ஒரு பழமையான மொழி என்பதற்காகவோ சிறந்த இலக்கண செழுமை நிறைந்தது என்பதற்காகவோ  அவர் அதைப் பாராட்டவில்லை, அதில் உள்ள பாட்டு இலக்கியங்கள், கதை இலக்கியங்கள் மற்றும் அதிலுள்ள சில கருத்துகளையும் கூறுகளையும் மக்கள் மன நலன் மற்றும் அறிவு நலன் பயன்தரும் வகையில் இருப்பதை ஆராய்ந்து அறிந்ததால் பாராட்டினார். அதற்காக அவற்றில் உள்ள மூட […]