0

Enter your keyword

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

என்னிடம் பல பேர், “உனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லையா? வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கும் இந்து மதத்தைத்தான் எதிர்க்கிறீர்கள், இந்த மதத்தில் இல்லை என்றாலும் வேறு மதத்திலாவது நம்பிக்கை இருக்கலாம். அல்லவா?” என கேட்பதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் ஏதோ ஒரு வகையில் பிற மதங்களை ஏற்றுக் கொள்ளாமல் தன் மதம் மட்டுமே சிறந்தது எனக் கூறுபவை ஆகும். இன்று நாம் அறிவியல் காலகட்டத்தில் இருப்பதால், எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையிலும், அதில் இருக்கும் […]

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது. இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட தருணம் இது. ஐம்பது-அறுபது ஆண்டுகள் முன் தந்தை பெரியார் எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாரோ, எந்த திட்டத்தை  கலைஞர் கருணாநிதி சட்ட வடிவமாக கொண்டு வந்தாரோ, அந்தத்  திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இனி எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறி இருக்கின்றது. […]

பகுதி நேர நாத்திகர்கள்!

பகுதி நேர நாத்திகர்கள்!

கடவுளை முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதி அடைந்து நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆத்திகர்கள்! அதற்கு நேர்மாறாக கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் நாத்திகர்கள் என்று எல்லோரும் அறிந்ததே! ஆனா அது என்னங்க பகுதி நேர நாத்திகர்கள்? தன்னையறியாமலேயே கடவுளை மறந்து பகுத்தறிந்து தன் சுய அறிவுக்கு எட்டி சில பல செயல்களை செய்பவர்களே பகுதிநேர நாத்திகர்கள். ஆனால் இதைக் கூறினால் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கடவுள் என்று ஒன்று இருக்கிறது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்று தங்களைத் தானே […]

நூலிபான்கள்!

நூலிபான்கள்!

காந்தியை சுட்ட கோட்ஸேவும் , சாவர்க்கரும் (ஒரே படத்தில்) இன்று இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கும் சொல்! “நூலிபான்கள்“. ஒரு மனிதத்தன்மையற்ற கும்பலை குறித்து ஒருவர் தனது பேச்சில் எழுதிய சொல் இன்று இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.டேனிஷ் சித்திக்கி, ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களும் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்கு பலரும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து கொண்டிருந்த வேளையில் ஒரு கும்பல் மட்டும் […]

சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி!!! தமிழகத்தில் அந்தப் பெயரை கேட்டாலே ஒன்று கிண்டலாக பேசுகிறார்கள், அல்லது மிகவும் அருவருக்க தக்க சொல்லாக பார்க்கிறார்கள். ஒருவரை வாய் தவறி சங்கி என்று குறிப்பிட்டு விட்டால் ஒன்று பதறி விடுகிறார்கள் அல்லது மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது. சமீபத்தில் எங்களை சங்கி என்று தங்களை அடையாளப் படுத்த வேண்டாம் என கமல், ரஜினி போன்றோர் பதறியது இதற்கு சான்று! அந்த அளவுக்கு வெறுக்கத்தக்க வார்த்தையா சங்கி? ஏன் தமிழ்நாட்டில் அச்சொல்லை மிகவும் ஏளனமாகப் பார்க்கிறார்கள்? […]

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணி அதான் ஆத்திகம் என்றாலே பிடிக்காது, கடுமையாக விமர்சனம் செய்யும் திராவிடம் ஆயிற்றே? பின் எதற்கு ஆத்திகம் வளர்க்க வேண்டும் என்று கேள்வி வருமே? இயக்கமாக விமர்சனம், பகுத்தறிவு பரப்புதல் போன்றவற்றை இன்றளவும் செய்து கொண்டு தான் வருகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அனைத்து விருப்பு வெறுப்புகளையும் தாண்டி தான் ஆட்சி செய்யவேண்டும் என்பதை இந்த நாட்டிற்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது திராவிடமும், திராவிட சித்தாந்தம் கொண்ட […]

எது பார்ப்பனியம்?

எது பார்ப்பனியம்?

இங்கு பார்ப்பனியம் என்று கூறிய உடனே பல பேர் அது ஒரு பிரிவு மக்களான பார்ப்பனர்களை குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி அல்ல! இந்த சொல்லாடல் ஒரு பிரிவு மக்களையோ ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களை குறிப்பிடும் சொல் அல்ல. இது ஒடுக்குமுறை மனப்பான்மையை கொண்டு அடுத்தவரை ஜாதி,மதம், இனம், மொழியால் ஒடுக்கி, தாழ்த்தி பேசி, அவர்கள் உழைப்பில் குளிர்காய நினைக்கும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனையும் குறிக்கும் சொல். பார்ப்பனியம் என்பது மேலாதிக்கத்தை நிலை […]

வேண்டாமே மதம்!

வேண்டாமே மதம்!

இன்று மதம் என்ற ஒன்றுதான் உலகத்தில் பல பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது. மத்திய கிழக்கிலும் சரி, ஆப்பிரிக்காவிலும் சரி, சீனாவிலும் சரி, ஐரோப்பியாவில் சரி, தென் கிழக்கிலும் சரி சமீபமாக நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிலும் மதவெறியும் இனவெறியும் தலைவிரித்தாடுகிறது. அந்த இன வெறிக்கு அடிகோலியது மதவெறி . மனிதன் நிம்மதியாக வாழவே மதங்களை உருவாக்கினார்கள். ஆனால் இப்பொழுது அப்படியா இருக்கிறது? எந்த மதமும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையல்ல. மதம் என்பது அது தோன்றிய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்து […]