0

Enter your keyword

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

திராவிடம் என்னவெல்லாம் செய்தது என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டாமா? முதன்முதலில் திராவிடக் கட்சியின் ஆட்சி, காங்கிரஸ் அரசை வென்று  1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைகின்றது. அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது. முதலமைச்சர் அண்ணா அவர்களால் 1968-ஆம் […]

பெரியார் 143

பெரியார் 143

பெரியாரின் 143-வது பிறந்தநாளான இன்று எழுதும் இக்கட்டுரையில் பெரியாரின் வாழ்க்கையைப் பற்றியோ, அவரின் கொள்கைகளைப் பற்றியோ அல்லது அவரது வரலாற்றைப் பற்றியோ நாம் பேசப் போவதில்லை. இதெல்லாம் ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம்! அவற்றை தெரிந்துகொள்ள படிக்க புத்தகங்களும், இணையத்தில் பல காணொளிகளும் இருக்கின்றன. ஆனால் இன்று பேசப்போவது, பெரியார் எப்படி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்? இளைஞர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? 143 ஆவது பிறந்த நாளான இன்று சமூக வலைதளங்களில் பெரியாரை கொண்டாடி தீர்ப்பவர்கள் இளைஞர்களே! தான் […]

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

ஒரு பிரிவினர் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது. இந்தியா விடுதலை அடைந்ததற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு உயர் பதவிகள், 90% அரசு வேலைகள் மற்றும் தனியார் நிறுவன  உயர் பதவிகள் என அனைத்திலும் இருந்தனர். அரசு பதவிகள் மட்டுமில்லாமல் அரசியல் இயக்கங்களிலும் கூட இவர்களது ஆதிக்கமே அதிகமாய் இருந்தது. ஒரு சிறு மக்கள் தொகை உள்ள அச்சமூகம், அதிகப்படியான மக்கள் தொகை […]

பேரறிஞர் அண்ணா!

பேரறிஞர் அண்ணா!

ஆம் திராவிடத்தை அரசியலாக்கி ஒரு தேர்தல் அரசியல் இயக்கமாக நிர்மாணித்து அதைத்  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இயக்கமாக இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிட கட்சிகளின் அடித்தளம் இவரே. பேரறிஞர் அண்ணா (15.09.1909 – 03.02.1969) தேர்தல் அரசியல் வேண்டாம் என்று பெரியார் தலைமையில் திராவிட கழகம் கடை பணி மட்டுமே ஆற்றிக் கொண்டிருந்த வேளையில் அரசியல் அதிகாரம் பெற்றால் தான் எதையும் சட்டமாக்கி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தேர்தல் அரசு பாதையை தேர்ந்தெடுத்தவர் பேரறிஞர் […]

OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

நேற்று (29-07-2021) திராவிடத்தின் வரலாற்றில் இன்னொரு மைல்கல்! இந்தியாவை திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூற்று நேற்று நடந்தது. இதுவரை (OBC) என்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கொடுக்க வேண்டிய இடங்களை கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வந்தது! இன்று அப்பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் திராவிடத்தின் திராவிடக் கட்சியின் செயல்பாடுகளால் கிடைத்த வெற்றி. உடனே சங்கிகள் இது எங்கள் […]

இதழாசிரியர் கலைஞர்!

இதழாசிரியர் கலைஞர்!

தமிழ் எழுத்து என்பது அவர் மூச்சு, கலைஞர் எங்கிருந்து அந்த பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே! மாணவநேசன் என்னும் கையெழுத்து இதழை முதன்முதலில் வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். அவருக்கும் பத்திரிகை துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் ஆரம்பித்ததே பத்திரிகையில் தான். பெரியாரின் அறிமுகமும் கிடைத்தது பத்திரிகையால் தான் பேரறிஞர் அண்ணாவை சந்தித்ததும் அப்படித்தான். இதோ கலைஞர் இப்படித்தான் சந்தித்தார் தன் இதய மன்னன் அண்ணாவை. 1942ஆம் ஆண்டு அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ […]

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து கலைஞர் உண்ணாவிரதம். இன்று சமூக வலைத்தளங்களில்  ‘நாம் தமிழர்’ தம்பிகள் திராவிட கட்சிகளை, ஈழ தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று கூக்குரலிடுகின்றார்கள். திராவிடக் கட்சிகளின் துரோகத்தால் தான் இன்று ஈழமே வீழ்ந்தது என்பதை போன்றதொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி வரலாறு தெரியாத இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் திராவிட எதிர்ப்பை ஆழமாக விதைத்து வருகின்றனர். ‘நாம் தமிழர்’ தம்பிகள் கூறுவது போல இவ்வளவு ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுமே செய்ததில்லையா? […]