0

Enter your keyword

திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

நூற்றி முப்பத்தி மூன்று என்பது வெறும் எண் அல்ல. தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கிய ஆரிய இந்துத்துவத்திற்கு எதிர்வினை காட்டும் விதமாக திராவிடம் அமைத்த திருவள்ளுவர் சிலையின் அளவு 133 அடி. ஐயன் திருவள்ளுவர் சிலை, குமரிக் கடலின் முனையில் நின்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு செய்தி சொல்கிற மாதிரி அல்லவா அமைந்திருக்கிறது? பிரம்மாண்டத்தின் மறு உருவம் வள்ளுவனின் சிலை. அதை பார்க்கும் போது பிரமிக்காமல் எப்படி இருக்க முடியும்? இப்பொழுது சிலையின் முழு சிறப்புகளையும் பார்ப்போம்! […]

கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

வள்ளுவர் கோட்டம், சென்னை  கலைஞர் என்றால் தமிழ் என்று அனைவரும் அறிந்த ஒன்று! அவருக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மீதும் தீராத பற்றும் காதலும் இருந்ததும் உலகம் அறிந்ததே! ஆனால் அவர் குறிப்பாக திருக்குறளை மிகவும் நேசித்தார் என்பதற்குச் சான்று குமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற காலம் மறக்க முடியாத நினைவுச் சின்னங்கள். அது மட்டுமா? ஒவ்வொரு பேருந்திலும் திருக்குறள் வாசகங்கள், எல்லா நூலகங்களிலும் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை […]

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

திராவிடம் என்னவெல்லாம் செய்தது என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டாமா? முதன்முதலில் திராவிடக் கட்சியின் ஆட்சி, காங்கிரஸ் அரசை வென்று  1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைகின்றது. அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது. முதலமைச்சர் அண்ணா அவர்களால் 1968-ஆம் […]

மொழிப்போர்!

மொழிப்போர்!

திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில், தொடர் செயல்பாடுகளில் ஒன்று மொழியுரிமைக்கான போராட்டங்கள், தமிழுக்காக உயிர் நீத்த, அடி வாங்கி ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகங்கள். ‘இந்தி’, ‘இந்து – இந்துஸ்தான்’ என்கிற ஒற்றைக் கலாச்சாரத்தில் இந்தியா சிக்காமல் இருக்கவும், குறிப்பாக இந்தி மொழியை தமிழர்கள் மீது திணித்தபோது வெகுண்டு எழுந்த தமிழ் இளைஞர்கள் நடத்திய ஒரு புரட்சிப் போராட்டமே மொழிப்போர்! இன்றளவும் இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தை தனித்து இயங்கச் செய்வதற்கு இந்த மொழிப்போர் போராட்டமே மிக […]

உலகத் தமிழ் படிப்பு!

உலகத் தமிழ் படிப்பு!

நமது தமிழ்மொழியையும் அதன் சிறப்புக்களையும் நாம், தமிழ் பல்கலைக்கழகங்களின் மூலமாகப் படித்து அறிந்து கொள்ளக்கூடிய வசதி தமிழகத்தில் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அத்தகைய பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றது என்பது நமக்குத் தெரியுமா? இந்தியா மட்டும் அல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோமா? இல்லை, என்பதே பதிலாக வரும்! அதற்காகத் தான் இந்தப் பதிவு. இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்துப் எழுதப்பட்டிருக்கும் பதிவு என்றாலும், இதனைக் காணும் பொழுது […]

தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தொல்காப்பியம் இந்தப் பெயரை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டிருப்போம். பிறகு அதை அத்தோடு மறந்திருப்போம். இதே நிலைதான் நமது குழந்தைகளுக்கும். தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார் தொல்காப்பியர். அதில் பழந்தமிழ் மக்களின் அக, […]

தமிழ்ப் புத்தாண்டு!

தமிழ்ப் புத்தாண்டு!

தை 1 தமிழ்ப் புத்தாண்டா அல்லது சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? இதைப் பற்றிய விவாதங்கள் நிறையப் பார்த்தாகிவிட்டது ஆனால் எது தான் நமக்குப் புத்தாண்டு என திராவிடர்களாகக் கொஞ்சம் பகுத்தறிந்து பார்ப்போமா? சித்திரையில் கொண்டாடப்படும் புத்தாண்டு என்பது என்ன?அதைப்பற்றி இருக்கும் வரலாறு என்பது கேட்கத் தகாதது என்பதால் அதை விட்டு விடுவோம். முதல் கேள்வி? தமிழர்கள் நாம் கொண்டாடும் புத்தாண்டின் பெயர் தமிழில் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் ஆண்டுகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே வருகின்றன. […]

தமிழ் திணிப்பு வேண்டாம்?

தமிழ் திணிப்பு வேண்டாம்?

Image by StockSnap from Pixabay என்னடா திராவிடம் என் மூச்சு, திராவிடம் என் பேச்சு என்று பேசியவன் இப்படி ஒரு தலைப்பை எழுதுகிறான் என்று பார்க்கிறீர்களா? இதை நான் சொல்லவில்லை. எந்த தமிழ் இளைஞர்கள் ஹிந்தி திணிப்பு வேண்டாம்! தமிழ் வாழ்க! என்று புரட்சி செய்தார்களோ அதே இளைஞர்களை வைத்து தமிழைத் திணிக்காதே என்று கூப்பாடு போட வைத்தது ஒரு கூட்டம். அந்த வரலாற்று நிகழ்வைத் தான் இனி நாம் காணப்போகிறோம். முதலில் இச்செய்தியைக் கேள்விப்படும் […]

புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

Photo by Jose Almeida from Pexels பொதுவாகக் காடுகள் அவற்றின் அடர்த்தி மற்றும் உயிரின அமைப்புகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. மிகக்குறைந்த மனிதக் குறுக்கீடுகள், தனக்கே உரித்தான தாவர அமைப்பு மற்றும் அடர்த்தி மிக்கக் காடுகளை முதன்மை நிலைக் காடுகள் என்றும், முதன்மைநிலைக் காடுகளை ஒத்த தாவர அமைப்புள்ள மனித குறுக்கீடுகளுக்குப் பிறகு அமையப்பெற்ற காடுகள் இரண்டாம்நிலைக் காடுகள் எனவும் உயிரியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் பல்லுயிர் காடுகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.  ஏனென்றால் ஒரே தாவர இடமாகவோ […]

புலவர் இரா. இளங்குமரனார்

புலவர் இரா. இளங்குமரனார்

பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். இன்று (25-07-2021) முதுமை காரணமாக மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்து சென்றது! அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநில அரசு ஒருவருக்கு அரசு மரியாதை கொடுக்கிறது என்றால் ஒன்று அவர் அரசு பதவியில் இருக்க வேண்டும் அல்லது அந்த நாட்டிற்கு ஏதாவது மிகவும் சிறபபாக தொண்டாற்றி […]