0

Enter your keyword

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

இதற்கும் திராவிடத்திற்கு என்ன சம்பந்தம்? எப்படி வந்தது இந்தச் சட்டம்? தானாக வந்துவிட்டதா? இல்லை. திராவிடத்தால் வந்தது. ஒரு குலப் பெண்களை இப்படி இழிவாகவும் விரும்பத்தகாத செயல்களிலும் வற்புறுத்தி ஈடுபடுத்துவது கண்டு வெகுண்டு எழுந்த திராவிடச் சித்தாந்தங்களை உள்வாங்கிய பெண்களால் வந்தது. யார் அந்தப் பெண்கள்? முத்துலட்சுமி ரெட்டி & மூவலூர் ராமாமிர்தம். அதுவும் இன்று நினைத்து நாளை சட்டமாக இயற்றி உடனே வந்துவிடவில்லை. பல தசாப்த ஆண்டுகாலப் போராட்டம். சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது […]

ஊருக்குத்தான் அறிவுரை!

ஊருக்குத்தான் அறிவுரை!

ராம்நாத் கோவிந்த் அவர்களை இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்த்திய போதும், இப்பொழுது திரு எல். முருகன் அவர்களை மத்திய இணை அமைச்சராக, பிஜேபியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியினர் பேசி வந்தது, வருவது, “நாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவரைத் தலைவராகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக சமூகநீதி பேசி வரும் திராவிடக் கட்சிகள் அப்படி செய்து இருக்கின்றதா?” என்பதே. ஆம். இதுவரை தலைவர் பொறுப்பில் ஒரு […]

சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கம்.

திராவிடர் கழகத்தின் வரலாறு நாம் படிக்கும் பொழுது அதன் ஆரம்பப் புள்ளி சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவோம். பெரும்பாலும் திராவிடர் கழகத்தைப் பற்றிப் பேசும் இன்றைய தலைமுறையினர் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே திராவிடர் கழகத்தின் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இன்று காண்போம். சுயமரியாதை இயக்கம் (Self-Respect Movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும், அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925-ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களால் […]

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

ஒரு பிரிவினர் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது. இந்தியா விடுதலை அடைந்ததற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு உயர் பதவிகள், 90% அரசு வேலைகள் மற்றும் தனியார் நிறுவன  உயர் பதவிகள் என அனைத்திலும் இருந்தனர். அரசு பதவிகள் மட்டுமில்லாமல் அரசியல் இயக்கங்களிலும் கூட இவர்களது ஆதிக்கமே அதிகமாய் இருந்தது. ஒரு சிறு மக்கள் தொகை உள்ள அச்சமூகம், அதிகப்படியான மக்கள் தொகை […]

ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

அது என்ன ஒடுக்குமுறையின் உச்சம்? படிப்பவர்கள் கேட்கலாம். இந்தியா பல ஜாதிகளால் மொழிகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தேசம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு தேசமாக ஒன்றிணைத்து இருந்தாலும் மொழிகளாலும், ஜாதிகளாலும், மதங்களாலும் இன்னும் பிளவுபட்டு இருக்கிறது இந்த நாடு. பார்ப்பனியம் வர்ணாசிரமத்தை தோற்றுவித்து பல ஜாதிகளை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஜாதி வெறியைத் தூண்டி அதில் குளிர் காய்கிறது. இன்று நாம் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் இட […]

நில உச்சவரம்பு சட்டம்!

நில உச்சவரம்பு சட்டம்!

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் நிலங்கள் பலவும் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தன என்பதும் அதை வைத்திருந்தவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்பதும் வரலாறு நமக்குத் தெரியப்படுத்தியுள்ளது. அப்பேர்பட்ட அவர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட வேண்டும் எனில் நிலச்சீர்திருத்தம் செய்வது இன்றியமையாததாகும். ஏனென்றால் நிலச்சீர்திருத்தமும், பசுமைப் புரட்சியும் தமிழ்நாட்டு விவசாயத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எந்த நாடும் நவீன வளர்ச்சி அடைய வேண்டுமெனில், அந்நாட்டில் முதலில் நிலம் பற்றிய பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நிலக்குவியல் தடுக்கப்பட்டு உழுபவர்களுக்கு நிலம் என்ற […]

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது. இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட தருணம் இது. ஐம்பது-அறுபது ஆண்டுகள் முன் தந்தை பெரியார் எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாரோ, எந்த திட்டத்தை  கலைஞர் கருணாநிதி சட்ட வடிவமாக கொண்டு வந்தாரோ, அந்தத்  திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இனி எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறி இருக்கின்றது. […]

கு. வெ. கி.ஆசான்!

கு. வெ. கி.ஆசான்!

தமிழ் தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னை சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல் கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவராகவும் திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பல்வேறு திராவிட இயக்கங்களில் பல பொறுப்புகளையும் ஏற்றுத்   திறம்பட பணியாற்றியவர்தான் கு. வெ. கி.ஆசான். திராவிட இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இவர் பெயர் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஆனால் சாமானிய மக்களுக்கும் இந்தக் கால இளைஞர்களுக்கும் இவரை […]

எதிலும் வேண்டும் சமூக நீதி!

எதிலும் வேண்டும் சமூக நீதி!

அனைத்து துறைகளிலும் சமூகநீதி தேவைப்படுகிறது. ஏனென்றால் பல ஆண்டு காலமாக நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மேல் வரச்செய்வதே சமூகநீதியின் ஒரே கோட்பாடு. பிற எல்லா இடங்களிலும் சமூக நீதி, அரசியல் அமைப்பு சட்டத்தால் நமக்கு கிடைத்தாலும்  பெரும்பாலும் ஒரு இடத்தில் மட்டும்  யாரும் கண்டுகொள்வதே இல்லை. எந்த இடம் அது? கோவில்களே அந்த இடம். சனாதனதர்மத்தின்படி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் நசுக்கப்படுகிறோம் என்று தெரிந்தும், இடைநிலை சமூக மக்கள் தங்கள் எதிர்ப்பை சனாதன கூட்டத்தின் மேல் காட்டாமல், […]

OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

நேற்று (29-07-2021) திராவிடத்தின் வரலாற்றில் இன்னொரு மைல்கல்! இந்தியாவை திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூற்று நேற்று நடந்தது. இதுவரை (OBC) என்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கொடுக்க வேண்டிய இடங்களை கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வந்தது! இன்று அப்பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் திராவிடத்தின் திராவிடக் கட்சியின் செயல்பாடுகளால் கிடைத்த வெற்றி. உடனே சங்கிகள் இது எங்கள் […]