0

Enter your keyword

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

இதற்கும் திராவிடத்திற்கு என்ன சம்பந்தம்? எப்படி வந்தது இந்தச் சட்டம்? தானாக வந்துவிட்டதா? இல்லை. திராவிடத்தால் வந்தது. ஒரு குலப் பெண்களை இப்படி இழிவாகவும் விரும்பத்தகாத செயல்களிலும் வற்புறுத்தி ஈடுபடுத்துவது கண்டு வெகுண்டு எழுந்த திராவிடச் சித்தாந்தங்களை உள்வாங்கிய பெண்களால் வந்தது. யார் அந்தப் பெண்கள்? முத்துலட்சுமி ரெட்டி & மூவலூர் ராமாமிர்தம். அதுவும் இன்று நினைத்து நாளை சட்டமாக இயற்றி உடனே வந்துவிடவில்லை. பல தசாப்த ஆண்டுகாலப் போராட்டம். சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது […]

சமூக இழிவு எது?

சமூக இழிவு எது?

சமூக இழிவு என்றால் என்ன? நம் நாட்டில் இந்தக் காலகட்டத்தில் உடனே அகற்ற விரும்பும் சமூக இழிவு எது என்று கேட்டால், அதற்கு மறுகணமே நமக்கு வரும் பதில் தீண்டாமை, மூடநம்பிக்கை, மதவெறி, இனவெறி, ஊழல், பெண்ணடிமை, பாலியல் கொடுமை, திரைத்துறை மோகம், போதைப் பழக்கங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, முதியோர் இல்லம், விபச்சாரம், மோசமான நிர்வாகம், இயற்கை வளங்களைச் சூறையாடுதல், சாதி வெறி, கொத்தடிமைத் முறை என்றெல்லாம் அவரவர் கருத்திற்கேற்ப சொல்லப்படும். ஆனால், […]

இப்படியும் அழைக்கலாமே!

இப்படியும் அழைக்கலாமே!

நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திப்போம் அதில் பல முகங்கள் நமக்குத் தெரிந்தவையாக இருந்தாலும் அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது. அவர்களை அவர்கள் செய்யும் வேலையைகொண்டே நாம் அடையாளப்படுத்தி நினைவு வைத்திருப்போம். ஓட்டுநர், நடத்துனர், குப்பைக்கார அம்மா/அய்யா, பூ விற்பவர், காய்கறி விற்பவர், காவலாளி, நம் அலுவல ஊழியர்கள் பலரையும் அவர்களின் பதவியை வைத்துத் தான் நாம் அழைக்கிறோம். நமக்கு மேல் பதவியில் இருப்பவர்களைப் பொதுப்படையாக சார் என்று மேடம் என்றும் அழைத்து விடுகிறோம். இப்படி […]

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது. இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட தருணம் இது. ஐம்பது-அறுபது ஆண்டுகள் முன் தந்தை பெரியார் எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாரோ, எந்த திட்டத்தை  கலைஞர் கருணாநிதி சட்ட வடிவமாக கொண்டு வந்தாரோ, அந்தத்  திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இனி எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறி இருக்கின்றது. […]

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

சுயமரியாதை திருமணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் அதை செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்னடா இதுவும் திருமணம் தானே இதில் என்ன பெருசாக சேமித்து விடப் போகிறீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? இந்திய கல்யாண சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடிக்கும் மேல். அதுமட்டுமில்லாமல் 25 முதல் 30 சதவீத வளர்ச்சியில் அது ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் திருமணம் செய்யும் […]

லுங்கி!

லுங்கி!

என்னடா லுங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர், அப்படி என்ன எழுதி இருப்பார் என்று பார்க்கிறீர்களா? கைலி என்பதே அதன் தமிழ் சொல்லாகும் ஆனால் மக்களுக்கு மிகவும் பயன்பாட்டில் உள்ள சொல்லை கூறினால் தானே மனதில் பதியும். இனி கைலி என்றே பதிவிடுகிறேன், கைலி பற்றி தான் எழுத போறேன் ஆனா கைலியின் வரலாற்றைப் பற்றியல்ல. கைலி அணிவதால் பல இடங்களில் ஒதுக்கப்படும் ஒடுக்குமுறை பற்றியும் கைலியை இரண்டாம் தர ஆடையாக மாற்றிய மேல்தட்டு மற்றும் பார்ப்பனிய மனப்பான்மையைப் […]

எது பார்ப்பனியம்?

எது பார்ப்பனியம்?

இங்கு பார்ப்பனியம் என்று கூறிய உடனே பல பேர் அது ஒரு பிரிவு மக்களான பார்ப்பனர்களை குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி அல்ல! இந்த சொல்லாடல் ஒரு பிரிவு மக்களையோ ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களை குறிப்பிடும் சொல் அல்ல. இது ஒடுக்குமுறை மனப்பான்மையை கொண்டு அடுத்தவரை ஜாதி,மதம், இனம், மொழியால் ஒடுக்கி, தாழ்த்தி பேசி, அவர்கள் உழைப்பில் குளிர்காய நினைக்கும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனையும் குறிக்கும் சொல். பார்ப்பனியம் என்பது மேலாதிக்கத்தை நிலை […]

எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

திருமணம் என்பது தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. பல காலங்களில் மருவி மருவி ஆரியத்தின் பிடியில் சிக்கி இன்று நமக்கு ஒப்பாத நமது முன்னோர்கள் செய்யாத பல சடங்குகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் தமிழர்கள் திருமணம் அப்படி நடைபெறவில்லை, குறிப்பாக வேள்வி வளர்த்து ஒரு புரோகிதர் மந்திரம் சொல்லவே இல்லை. அது எப்படி நீங்கள் இவ்வளவு தீர்க்கமாக கூறுகிறீர்கள் என்று கேட்கலாம் நமது சங்க இலக்கிய பாடல்களில் திருமண முறையை விவரமாக […]

ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியத்தின் படையெடுப்பினால் திராவிட மக்களின் பண்பாடு, விழாக்கள் என்று  பல விடயங்கள் இன்று ஆரிய மயமாகிப் போய் இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஏற்கனவே வடமொழிச் சொற்களின் கலப்பு ஆரியத்தின் பண்பாட்டு படையெடுப்பினால் எப்படி தமிழைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதைக் கடந்த கட்டுரையில் கண்டோம். இதேபோல் ஆரியம் நமக்கே  தெரியாமல் எவ்வாறு திராவிட மக்களின் அனைத்து விடயங்களிலும் இரண்டறக் கலந்து விட்டது என்று பார்ப்போம். வடக்கே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களையும், கடவுள்களையும் நமது மனதில் […]