ஏன் இலவசம்?
இலவசம் என்றவுடன் முதலில் நமது நினைவுக்கு வருவது அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சி அமைத்தவுடன் மக்களுக்கு இதெல்லாம் இலவசமாக தருவோம் என்று கூறுவதைத்தான். இன்னும் சில அறிவுஜீவிகள் இப்படி இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூட அங்கலாய்ப்பு செய்வது உண்டு. உண்மையில் இந்த இலவசங்களால் தான் நாடு சீர்கெடுகிறதா? இது மக்களை சோம்பேறிகளாக்கும் முயற்சியா? அல்லது தங்கள் ஓட்டுக்காக மக்களை இப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களா? இல்லை மக்கள்தான் இலவசங்களுக்காக அடிமையாகி அரசியல் கட்சிகளுக்கு […]