0

Enter your keyword

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

இதற்கும் திராவிடத்திற்கு என்ன சம்பந்தம்? எப்படி வந்தது இந்தச் சட்டம்? தானாக வந்துவிட்டதா? இல்லை. திராவிடத்தால் வந்தது. ஒரு குலப் பெண்களை இப்படி இழிவாகவும் விரும்பத்தகாத செயல்களிலும் வற்புறுத்தி ஈடுபடுத்துவது கண்டு வெகுண்டு எழுந்த திராவிடச் சித்தாந்தங்களை உள்வாங்கிய பெண்களால் வந்தது. யார் அந்தப் பெண்கள்? முத்துலட்சுமி ரெட்டி & மூவலூர் ராமாமிர்தம். அதுவும் இன்று நினைத்து நாளை சட்டமாக இயற்றி உடனே வந்துவிடவில்லை. பல தசாப்த ஆண்டுகாலப் போராட்டம். சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது […]

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது. இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட தருணம் இது. ஐம்பது-அறுபது ஆண்டுகள் முன் தந்தை பெரியார் எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாரோ, எந்த திட்டத்தை  கலைஞர் கருணாநிதி சட்ட வடிவமாக கொண்டு வந்தாரோ, அந்தத்  திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இனி எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறி இருக்கின்றது. […]

சாமி – யார்?

சாமி – யார்?

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள். பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித்  தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர். சரி நமது தலைப்புக்கு வருவோம்! சாமி – யார்? […]

பகுதி நேர நாத்திகர்கள்!

பகுதி நேர நாத்திகர்கள்!

கடவுளை முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதி அடைந்து நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆத்திகர்கள்! அதற்கு நேர்மாறாக கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் நாத்திகர்கள் என்று எல்லோரும் அறிந்ததே! ஆனா அது என்னங்க பகுதி நேர நாத்திகர்கள்? தன்னையறியாமலேயே கடவுளை மறந்து பகுத்தறிந்து தன் சுய அறிவுக்கு எட்டி சில பல செயல்களை செய்பவர்களே பகுதிநேர நாத்திகர்கள். ஆனால் இதைக் கூறினால் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கடவுள் என்று ஒன்று இருக்கிறது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்று தங்களைத் தானே […]

நூலிபான்கள்!

நூலிபான்கள்!

காந்தியை சுட்ட கோட்ஸேவும் , சாவர்க்கரும் (ஒரே படத்தில்) இன்று இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கும் சொல்! “நூலிபான்கள்“. ஒரு மனிதத்தன்மையற்ற கும்பலை குறித்து ஒருவர் தனது பேச்சில் எழுதிய சொல் இன்று இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.டேனிஷ் சித்திக்கி, ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களும் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்கு பலரும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து கொண்டிருந்த வேளையில் ஒரு கும்பல் மட்டும் […]

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணி அதான் ஆத்திகம் என்றாலே பிடிக்காது, கடுமையாக விமர்சனம் செய்யும் திராவிடம் ஆயிற்றே? பின் எதற்கு ஆத்திகம் வளர்க்க வேண்டும் என்று கேள்வி வருமே? இயக்கமாக விமர்சனம், பகுத்தறிவு பரப்புதல் போன்றவற்றை இன்றளவும் செய்து கொண்டு தான் வருகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அனைத்து விருப்பு வெறுப்புகளையும் தாண்டி தான் ஆட்சி செய்யவேண்டும் என்பதை இந்த நாட்டிற்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது திராவிடமும், திராவிட சித்தாந்தம் கொண்ட […]

கவுண்டமணி எனும் ஆத்திக  பகுத்தறிவாளன்!

கவுண்டமணி எனும் ஆத்திக பகுத்தறிவாளன்!

எம் ஆர் ராதாவுக்குப் பின் பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையில் கலந்து தமிழ்ப் படங்களில் கூறியவர் கவுண்டமணி அவர்கள். அவர் வசனங்கள் கேட்டாலே சில அடிப்படைவாத, பார்ப்பனிய, ஜாதி வெறி கூட்டங்களுக்கு எரிச்சலாக இருக்கும் என்பதே உண்மையாகும். நடிகவேள் போல வெளிப்படையாகச் சாடாமல்  கவுண்டமணி நகைச்சுவை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலிருக்கும். இன்று சமூக ஊடகங்களில் பெரும்பாலும் வலது சாரி மட்டும் பார்ப்பனிய (ஆதிக்க சிந்தனை உடையவர்கள் அனைவரும்)  அனுதாபிகளை பகடி செய்ய இவரின் (counter) வசனங்களைத் […]