0

Enter your keyword

நில உச்சவரம்பு சட்டம்!

நில உச்சவரம்பு சட்டம்!

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் நிலங்கள் பலவும் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தன என்பதும் அதை வைத்திருந்தவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்பதும் வரலாறு நமக்குத் தெரியப்படுத்தியுள்ளது. அப்பேர்பட்ட அவர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட வேண்டும் எனில் நிலச்சீர்திருத்தம் செய்வது இன்றியமையாததாகும். ஏனென்றால் நிலச்சீர்திருத்தமும், பசுமைப் புரட்சியும் தமிழ்நாட்டு விவசாயத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எந்த நாடும் நவீன வளர்ச்சி அடைய வேண்டுமெனில், அந்நாட்டில் முதலில் நிலம் பற்றிய பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நிலக்குவியல் தடுக்கப்பட்டு உழுபவர்களுக்கு நிலம் என்ற […]

இந்தியாவின் முதல் நிதியமைச்சர்!

இந்தியாவின் முதல் நிதியமைச்சர்!

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஒரு தமிழர். அதுவும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் இவர் பெயரை அறிந்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கோலோச்சி வந்த காலகட்டத்தில் ஒரு தமிழர் இத்தனை உயரிய பதவிகளை வகித்தாரா என்று இக்கட்டுரை படித்த பின் இக்கால இளைஞர்களுக்கு தெரியவரும்.   அவர் ஆர். கே. சண்முகம்! 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் […]

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

இங்கு நடக்கும் பல வலதுசாரி கூட்டங்களில், மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாரத மாதா கி ஜே , வந்தேமாதரம் என்று குரல் எழுப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இன்று பல இளைஞர்கள், இளைஞிகள் ‘ஜி’ என்று அடைமொழியாகச் சேர்த்து பேசுவதை நாம் காணமுடிகிறது. எதற்கெடுத்தாலும் ஜி! எங்கு பார்த்தாலும் ‘ஜி’. அதை மரியாதை நிமித்தமாகக் கூறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் வடமொழிச் சொல்லான ‘ஜி’ நமக்கெதற்கு? இப்படி விவகாரத்திற்கு இடமான பேச்சுகளைப் பற்றியும், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கே […]

நூலிபான்கள்!

நூலிபான்கள்!

காந்தியை சுட்ட கோட்ஸேவும் , சாவர்க்கரும் (ஒரே படத்தில்) இன்று இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கும் சொல்! “நூலிபான்கள்“. ஒரு மனிதத்தன்மையற்ற கும்பலை குறித்து ஒருவர் தனது பேச்சில் எழுதிய சொல் இன்று இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.டேனிஷ் சித்திக்கி, ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களும் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்கு பலரும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து கொண்டிருந்த வேளையில் ஒரு கும்பல் மட்டும் […]

பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாதம் இவர்களின் முதல் மற்றும் கடைசி ஆயுதம்! எப்பொழுதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அல்லது கருத்து அரசியல் பேச முடியாமல் பின்தங்கும் நிலையில் இருக்கும்போதோ ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக கையில் எடுக்கும் ஆயுதம் தான் பிரிவினைவாதம்! இன்று பிரிவினைவாதம் பேசி அமைதியை குலைப்பார்கள் அல்லது பிரிவினைவாதம் பேசுவதை எதிர்ப்பது போல் அரசியல் செய்வார்கள். ஆனால் அவர்களின் ஒரே குறிக்கோள் மக்களை திசை திருப்பி அவர்களின் பார்ப்பனிய தந்திரத்தை நிலை நிறுத்துவதே ஆகும். திராவிட ஆட்சி […]