அவர்தான் பெரியார்!

Dec 30, 2020

வணக்கம் திராவிடர்களே!

திராவிடத்தை பற்றி பேசினால் அதில் பெரியாரை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது, அதிலும் பெரியாரையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏனென்றால் திராவிடத்தை பற்றி பல தலைவர்கள் பேசியுள்ளனர் ஆனால் அக்கருத்தை மக்களிடம் எடுத்துச் சென்று ஆழமாக விதைத்தவர் நம் தந்தை பெரியார்.

இன்றும் ஆரியம் தனது வேர்களை தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் பரப்பிய திராவிட கருத்துகளே அரணாக நின்று நம்மை காத்துக் கொண்டிருக்கின்றன.

அவரின் பணி அளப்பரியது, ஆம் அவர் திராவிட மக்கள் தெளிவு பெறவேண்டும் என்று தமிழகத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் சென்று கூட்டங்களில் பேசினார், உரையாற்றினார், பத்திரிகைகளில் எழுதினார் ஆனால் எவ்வளவு நேரம் பேசினார் எத்தகைய தூரம் பயணம் செய்தார் என்று இன்றைய தலைமுறைக்கோ அல்லது நமக்கோ தெரியுமா? தெரியாது தெரிந்தவர்கள் மிகவும் சொற்பமே! வாருங்கள் காண்போம்!

இதோ நண்பர்களே தந்தை பெரியாரின் வாழ்ந்த சுயமரியாதை வாழ்கை பற்றிய ஒரு குறிப்பு.

அவர் திரவிடத்திற்காக வாழ்நாள் ஆண்டுகள் – 94 (3மாதங்கள் 7 நாட்கள்)

அதை 1131 வாழ்நாள் மாதங்களாகவும்
4918 வாழ்நாள் வாரங்களாகவும் 34,431 வாழ் நாட்களாகவும் 8,26,344 மணித்துளிகளாகவும் 49,580,640 நிமிடங்களாகவும்  2,974,838,400 நாழிகைகளாகவும் கூறலாம்.

எதற்கு இப்படி பிரித்து கூறுகிறேன் என்று படிப்பவர்கள் நினைக்கலாம ஆனால் அவள் சுற்றுப்பயண விவரங்களையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் பெரியாரின் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமாகவும், அந்த நொடிகளை தமிழர்களின் விடியலுக்காக அவர் செலவழித்தார் என்பதற்காகவே இதை ஒப்பிபீடாக கொடுத்திருக்கிறோம்.

இப்பொழுது அவர் சுற்றுப்பயண விவரத்தைக் காண்போம்?

சுற்றுப்பயணம் செய்த நாட்கள் நாட்கள் 8200 அதில் வெளிநாடுகளில்  392 நாட்கள், பயணம் செய்த தொலைவு 8,20,000 மைல்கள். ஒரு ஒப்பீடுக்காக பார்த்தால் பூமியின் சுற்றலைப்போல் 33 மடங்கு பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப் போல் 3 மடங்கு இருக்கும்.

அப்படி அவர் சுற்றுப்பயணம் செய்து கருத்துரைகளிலும் நிகழ்ச்சிகளிலும்
கலந்து கொண்ட நிகழ்சிகள்  10,700
கருத்துரை ஆற்றிய காலமணிகள்  21,384  அதை நாட்கணக்கில் 891 நாட்களாகவும் 1,283,040 நிமிடங்களாகவும் 76,982,400 நாழிகைகளாகவும் சொல்லலாம்.

அத்தனைச் சொற்ப்பொழிவையும்
ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் தொடர்ந்து
ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தமிழ் மொழி, தமிழர்கள் மீதும் அவர்கள் வாழ்வு மீதும் என்ன ஒரு தீராத அக்கறை இருந்தால் அந்த தள்ளாத வயதிலும் இனிவரும் சந்ததிகள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்க இத்தனை நெடுந்தூர பயணங்கள் செய்து மக்களிடம் பேசி இருப்பார்?

இனி ஒருவர் பெரியாரைப் போல் நமக்கு கிடைக்கப் போவதில்லை!

ஆனால் அவர் விட்டுச் சென்றதை நம் ஒவ்வொருவரும் தொடர்ந்தாலே திராவிடம் செழிக்கும்! தமிழகம் தன்னைத்தானே மீட்கும் பாதையில் செல்லும்.

திராவிடம் படிப்போம்!
திராவிடம் பேசுவோம்!
திராவிடம் பழகுவோம்!

இவன்
அருண் மனோகரன்