அன்பு வணக்கத்துடன் திராவிடன்!

அன்பு வணக்கத்துடன் திராவிடன்!

இயற்கையில் அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்தும் சமமாக தங்கள் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே திராவிடம். சமூகநீதி யாருக்கும், யாவருக்கும் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்றும்.

திராவிடம் என்பது ஒரு பொதுவுடமை தத்துவம் மட்டும் அல்ல, அது ஒரு இனம், மொழி மக்களிடம் கலந்த உணர்வு. தான் பேசும் விடயம்திராவிட சித்தாந்தம் என்று தெரியாமலே நம் மக்கள் பேசி வருகிறார்கள், அதுவே இதற்க்கு சான்று.

திராவிடம் நமக்கு என்ன செய்தது என்று தெரிவிக்கும் முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். அதை கருத்தியலாக நிலைநாட்டிசென்றவர், தந்தை பெரியார், அதை மக்களின் தேவை என்று அறிந்து அரசியலாக முன்னிறுத்தி வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா, மேலும் இதை சட்டமன்றத்தில் சட்டம் ஆக மாற்றியவர் கலைஞர்.

திராவிடம் என்றால் தனித்த மொழியோ, இனமோ இல்லை. ‘தமிழ்’ தான் ‘திராவிடம்’. ‘திராவிடம்’ தான் ‘தமிழ்’ – ‘தமிழர்தான் ‘திராவிடர்’…

ஏனென்றால் தமிழ் தான் அனைத்து தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குமான மூலமொழி.

இதை ஆக்கப்பூர்வமாக  வழங்குவதே இந்த வலைத்தளத்தின் ஒரே பணி.

அனைவரும் திராவிடத்தை அறிவோம்!
திராவிடத்தை படிப்போம்!
திராவிடத்தை கற்பிப்போம்!
திராவிடத்தை பரப்புவோம்!
திராவிடத்தை உலகறியச் செய்வோம்!
வாழ்க தமிழ்! தமிழ் வெல்லும்!

இப்படிக்கு!
அருண் மனோகரன்
உங்களை போல் ஒரு திராவிடன்