0

Enter your keyword

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

இதற்கும் திராவிடத்திற்கு என்ன சம்பந்தம்?

எப்படி வந்தது இந்தச் சட்டம்?

தானாக வந்துவிட்டதா? இல்லை. திராவிடத்தால் வந்தது.

ஒரு குலப் பெண்களை இப்படி இழிவாகவும் விரும்பத்தகாத செயல்களிலும் வற்புறுத்தி ஈடுபடுத்துவது கண்டு வெகுண்டு எழுந்த திராவிடச் சித்தாந்தங்களை உள்வாங்கிய பெண்களால் வந்தது.

யார் அந்தப் பெண்கள்?

முத்துலட்சுமி ரெட்டி & மூவலூர் ராமாமிர்தம்.

அதுவும் இன்று நினைத்து நாளை சட்டமாக இயற்றி உடனே வந்துவிடவில்லை. பல தசாப்த ஆண்டுகாலப் போராட்டம்.

சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது தேவதாசி முறையை ஒழிப்பதற்காக இந்தியா விடுதலையை அடைந்ததை அடுத்து, 9 அக்டோபர் 1947 அன்று நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது தமிழ்நாடு தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்றும் அறியப்படுகிறது.

சென்னை மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் தந்தது. இந்துக் கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தது. தேவதாசி ஒழிப்புச் சட்ட முன்வரைவே பிறகு இச்சட்டமாக ஏற்பு பெற்றது.

சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு சுவாரசிய விவாதத்தைக் கூறுகிறேன்.

1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதா முன்வரைவைக்  கொண்டுவந்தபோது, ராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.

காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர்,

“இன்றைக்குத் தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வார்களானால் நாளைக்குப் பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணியக் காரியங்களை யார் செய்வார்”

என்று வாதிட்டார்.

“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்தப் புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அஃது என்ன, எங்கள் குலத்திற்கே ஏகபோகக் காப்புரிமையா?”

என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.

சட்டமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன், அவ்வளவு எளிதாக எந்த முன்வரைவுச் சட்டமும் இயற்றப்படவில்லை. இதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது, எத்தனை முறை இது தள்ளிப் போயிருக்கிறது என்பதைக் காண்போம்.

1912-ல் அப்போதைய இந்திய சட்டமன்றத்தில் தாதா பாய் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது அதை முன் நகர்த்திக் கொண்டுபோகவே ஓராண்டு ஆயிற்று.

1914-ல் அதை அமல்படுத்த முயலும்போது முதல் உலகப் போர் மூளுகிறது. போரின் காரணமாக மீண்டும் அது தள்ளி வைக்கப்பட்டது.

1925-ல் முத்துலட்சுமி ரெட்டி மதராஸ் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகிறார். அதன் பிறகு 1927-ல் மீண்டும் முயற்சி செய்கிறார்.

இதை ஒரு நீண்ட நெடிய போராட்டமாகவே நடத்தியிருக்கிறார். அப்பொழுதும் 20 ஆண்டுகள் கழித்து, அந்த மசோதா சட்டமாக நிறைவேறிச் சட்ட வடிவம் பெறுகிறது. இச்சட்ட மசோதாவை நிறைவேற்றும் முன் அதிலிருந்த பல சிக்கல்களை இப்படித்தான் எதிர்கொண்டு செய்து முடித்தார் அவர்.

ஏன், இந்த மசோதா மட்டும் நிறைவேறாமல் நீண்டுகொண்டே போகிறது என ஆராயும் விதமாக முத்துலட்சுமி ரெட்டி, பெரியாரிடம் இது குறித்துக் கருத்து கேட்கிறார்.

பெரியாரும்,

“எனக்கும் தேவதாசியர் வாழ்க்கை நடைமுறைகள் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை; எங்கள் இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் என்ற பெண்மணி இருக்கிறார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்

என்கிறார். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் இருவரும் சந்தித்துப் பேசும்போதுதான் தேவதாசி முறையிலுள்ள நடைமுறைகள் பற்றி முத்துலட்சுமியால் தெளிவடைய முடிகிறது.

சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தேவதாசிகள் இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தனர். அவர்கள் தாங்கள் கற்றறிந்த மேட்டுக்குடி கலைஞர்களே அன்றி, பால்வினைத் தொழிலாளர்கள் அல்ல என்று கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்.

கிராமப்புறங்களில் இருக்கும் தேவதாசிப் பெண்கள் பொருளாதார வசதி இல்லாததனால்தான் தேவதாசி மசோதாவை எதிர்க்கிறார்கள். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் கோயில் நிலத்திலிருந்து நெல் வராது. வீடும் கோயில் வசமாகும். பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் பெற்றால்தான் ஒரு பெண் துணிச்சலாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும். அவர்கள் ஆதரவைப் பெற வேண்டுமெனில் கோயில் நிலங்கள், மானிய நிலங்களாக இருப்பவற்றை அவர்களுக்கே உரிமையாக்கி அளிப்பது போன்ற சில ஆலோசனைகளை, மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்குத் தெரிவித்தார்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதான நிலங்கள் எனச் சொல்லப்பட்டவை. கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்கள் தேவதான நிலங்களாக ஏராளம் இருந்தன. அதில் விவசாயம் செய்யப்படும் நிலங்களும் உண்டு; வெற்றிடங்களும் உண்டு. ‘தேவதாசிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கே சாசனம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்று மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சொன்ன ஆலோசனையை ஏற்று, முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்திலும் பேசுகிறார்.

1929-ல் சட்டமன்றத்தில் தேவதாசி தடை மசோதா சட்டம் இயற்றப்பட்டும், அவ்வளவு எளிதாக நடைமுறைக்கு வரவில்லை.

1937-ல் முதலமைச்சர் ராஜாஜி, இதற்கு ஆதரவு தராததால் மீண்டும் ஒத்தி வைக்கிறார். முதலில் இங்குதான் நிறைவேறியிருக்க வேண்டும். ஆனால், மசோதா தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டதால் மைசூரும், கொச்சியும் முந்திக் கொண்டார்கள். அவர்கள் இந்த விஷயத்தில் நமக்கு முன்னோடிகள்.

அப்போது ராஜாஜி காங்கிரசிலிருந்தபோதும், பெரும்பாலானவர்களின் எதிர்ப்பினால் தேவதாசி நடைமுறையை ஒழிப்பதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதனால் ஒத்திவைத்துக்கொண்டே இருந்தார்.

அவருடைய அரசு ராஜினாமா செய்த அதன்பிறகு, ஓமந்தூரார் ராமசாமி சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1947-ம் ஆண்டில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னதாக 1910-ல் மைசூர் சமஸ்தானத்தில் தேவதாசி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாகத் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது மைசூர் சமஸ்தானத்தில்தான். அதன் பின்னர் கொச்சியிலும் இறுதியாக சென்னை ராசதானியிலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

சென்னை தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்பது அன்றைய இந்தியாவின் மாகாணங்களிலும் அதனை அடுத்து விடுதலை பெற்ற இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளிலும் பால்வினைத் தொழிலைச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்து நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற சட்டங்களுள் ஒன்றாகும்.

ஆனால் இந்தச் சட்டமே தேவதாசி பெண்கள் வாழ்க்கை முறை மாறுவதற்கும், அத்தொழிலை விட்டு விலகி ஒரு கண்ணியமான வேலை செய்து வாழ்க்கை நடத்துவதற்கும் வழிவகை செய்தது.

இதை செய்யத் தூண்டியது திராவிடச் சிந்தனையே! திராவிட ஆட்சியே!

1934 பாம்பே தேவதாசி பாதுகாப்புச் சட்டம், 1957 தேவதாசி பாதுகாப்பு (நீட்சி) சட்டம், 1988 ஆந்திரப் பிரதேச தேவதாசிச் சட்டம் ஆகியவை இச்சட்டங்களுள் சிலவாகும். பிறகு சட்டங்களைப் பின்பற்றியே மிகக்கடுமையான சட்டங்களும் ஏற்றப்பட்டன இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டது திராவிடமே!

சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் மக்கள் நலனுக்கும் அன்றும் இன்றும் என்றும் பாடுபடுவது  திராவிடமே!

தமிழ் வெல்லும்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.