0

Enter your keyword

உலகத் தமிழ் படிப்பு!

உலகத் தமிழ் படிப்பு!

உலகத் தமிழ் படிப்பு!

நமது தமிழ்மொழியையும் அதன் சிறப்புக்களையும் நாம், தமிழ் பல்கலைக்கழகங்களின் மூலமாகப் படித்து அறிந்து கொள்ளக்கூடிய வசதி தமிழகத்தில் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அத்தகைய பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றது என்பது நமக்குத் தெரியுமா? இந்தியா மட்டும் அல்லாமல் உலக அளவில் பல நாடுகளில் அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோமா?

இல்லை, என்பதே பதிலாக வரும்! அதற்காகத் தான் இந்தப் பதிவு. இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்துப் எழுதப்பட்டிருக்கும் பதிவு என்றாலும், இதனைக் காணும் பொழுது நமக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கின்றது. நமது மொழிக்கு இத்தனை நாடுகளில் இத்தனை மாநிலங்களில் பல்கலைக்கழகங்களா என்று!

இதையெல்லாம் கண்டபின், நமது இளைய தலைமுறையினருக்குப் புரியவரும் எதற்காகத் தமிழ் மேல் இவ்வளவு வெறி ஆரியத்திற்கு என்று. இவர்கள் திணிக்க நினைக்கும் இந்தியும் சமஸ்கிருதமும் எதற்காக? இப்படிப் பார் எங்கும் பரவியிருக்கும் தமிழின் செழுமையையும், தொன்மையையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காகத் தான். இப்படி எந்த நாட்டிலாவது இன்றைக்கு இத்தனை பல்கலைக்கழகங்களில் இந்தி படிப்பு என்று ஒன்று இருப்பதாகக் காட்டி விட முடியுமா? கண்டிப்பாக முடியாது. வட இந்தியா தாண்டினால் இந்தி எங்கேயும் கிடையாது!

ஆனால் தமிழுக்கு?

அதைப் பார்க்கவே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. வாருங்கள் காண்போம் எத்தனை நாடுகளில் தமிழ் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள், தமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்று.

இந்தியா

தமிழ்நாடு

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (தமிழ்த் துறை, சுவடித் துறை, மொழி ஆய்வுத் துறை – முதுகலை, முனைவர்)
தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ் மொழி; தமிழ் இலக்கியம் – முதுகலை, முனைவர்)
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை (தமிழ்த் துறை – முதுகலை, முனைவர்)
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (தமிழியல் துறை – முதுகலை, முனைவர்)
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை (தமிழ்க் கல்வியகம் – முதுகலை, முனைவர்). துறைகள்: ஒப்பிலக்கியம்; சுவடியியல்; நவீன இலக்கியம்; இலக்கணம்; ஆய்வுத் திறனியல்; தமிழியல்; மொழியியல்)
பெரியார் பல்கலைக்கழகம், சேலம் (தமிழ்த் துறை)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் (தமிழ்த் துறை – முதுகலை)
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி (தமிழ்த் துறை – இளங்கலை, முதுகலை, முனைவர்)
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் (தமிழியல் துறை – முதுகலை, முனைவர்)
திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் (தமிழ்த் துறை)
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ்த் துறை – இளங்கலை, முதுகலை)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (தமிழ்த்துறை)
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (தமிழ்த்துறை – இளங்கலை, முதுகலை, முனைவர்)
மகளிருக்கான அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – இளங்கலை, முதுகலை, முனைவர்
கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – இளங்கலை, முதுகலை
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம், சென்னை – இளங்கலை, முதுகலை, முனைவர்

புதுச்சேரி

புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி (சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்வியகம் – முதுகலை, முனைவர்)

கேரளம்

கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் – (இளங்கலை) – தமிழ்த்துறை
கோழிக்கோடு பல்கலைக்கழகம், கோழிக்கோடு – இளங்கலை

ஆந்திரப் பிரதேசம்

திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம் – (தமிழ் மொழி மற்றும் இலக்கியத் துறை – இளங்கலை)
சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் – (இளங்கலை, முதுகலை, முனைவர் ?) – தமிழ்த்துறை

கர்நாடகம்

கன்னட பல்கலைக்கழகம், ஹம்பி – (வகுப்புகள்)
பெங்களூர்ப் பல்கலைக்கழகம், பெங்களூரு (இளங்கலை)

ஒடிசா

உக்கல் பல்கலைக்கழகம்

மேற்கு வங்காளம்

கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா – டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர்
விஸ்வபாரதி பல்கலைக்கழகம், சாந்தி நிகேதன – டிப்ளமோ
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கல்கத்தா – இளங்கலை

உத்தரப் பிரதேசம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் – சான்றிதழ், டிப்ளமோ, முதுகலை
பனாரசு இந்து பல்கலைக்கழகம் = இளங்கலை

பிற மாநிலங்கள்

தில்லி பல்கலைக்கழகம், புதுத் தில்லி – (வகுப்புகள்), முதுகலை

இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – (இளங்கலை, முதுகலை, முனைவர்) – தமிழ்த்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை – (இளங்கலை, முதுகலை, முனைவர்) – மொழித்துறை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
பேராதனைப் பல்கலைக்கழகம் – (இளங்கலை) – தமிழ்த்துறை
சபரகமுவா பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
கொழும்பு பல்கலைக்கழகம் – (தமிழ் ஆசிரியர் பட்டயக் கல்வி)

மலேசியா

மலேயா பல்கலைக்கழகம் – (இளங்கலை)
பென்டிடிக்கன் சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகம் – (இளங்கலை – தமிழ் ஆசிரியர் கல்வி)
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர்

சிம் பல்கலைக்கழகம் – (இளங்கலை)
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)

மொரிசியசு

மொரிசியசு பல்கலைக்கழகம் – (இளங்கலை)
The Mahatma Gandhi Institute & Rabindranath Tagore Institute – தமிழ்த் துறை

தென்னாப்பிரிக்கா

திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கும் அயலகத் தமிழ் ஆசிரியர்பட்டய படிப்பு
யேர்மனி (Yemen)
இந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்) – (வகுப்புகள்) – தமிழியல்
ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் – South Asia Institute – (வகுப்புகள்)

ஐக்கிய இராச்சியம் (UK)

கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (வகுப்புகள்)
இலண்டன் பல்கலைக்கழகம் – (வகுப்புகள், தெற்காசியவியல் இளங்கலை) – தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் – தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது.

கனடா

ரொறன்ரோ பல்கலைக்கழகம் – (வகுப்புகள்) – ரொறன்ரோ பல்கலைக்கழகத் தமிழியல் நிகழ்ச்சித் திட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – கனடா வளாகம் – (இளங்கலை, முதுகலை)
யோர்க் பல்கலைக்கழகம் – (வகுப்புகள்) – Tamil Symposium
மக்கில் பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)

ஐக்கிய அமெரிக்கா

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) – (வகுப்புகள், ஆய்வு) – கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழியல் கதிரை
கொலம்பியா பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
கோர்னெல் பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
சிகாகோ பல்கலைக்கழகம் – (வகுப்புகள், ஆய்வு)
American Institute of Indian Studies –
சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
பென்செல்வேனியா பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
யேல் பல்கலைக்கழகம் – (வகுப்புகள்)
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (எடிசன்) – (வகுப்புகள்)
ஹார்வர்டு பல்கலைக்கழகம் – (வகுப்புகள்) – ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை / (வகுப்புகள்)
டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) (வகுப்புகள்)
மிச்சிகன் பல்கலைக்கழகம் – Tamil Language Endowment
மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் –
இசுரோனி புரூக் பல்கலைக்கழகம் – இசுரோனி புரூக் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை
ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் – தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது.

உசுபெக்கிசுத்தான்

Tashkent State Institute of Oriental Studies

உருசியா (Russia)

Oriental Faculty of Leningrad University
மொச்சுக்கோ பல்கலைக்கழகம்

செக் குடியரசு

Oriental Institute of the Academy of Sciences of the Czech Republic
Charles University in Prague – Czech Tamil and Dravidian Studies

பிரான்சு

Institut national des langues et civilisations orientales

போலந்து

வார்சா பல்கலைக்கழகம் – தமிழ்க் கதிரை
ஜகில்லோனியன் பல்கலைக்கழகம் – தமிழ்க் கதிரை

பின்லாந்து

கெல்சிங்கிப் பல்கலைக்கழகம் (வகுப்புகள் – அவ்வப்போது)

சுவீடன்

உப்சாலா பல்கலைக்கழகம் (வகுப்புகள், ஆய்வு)

அசுத்திரேலியா

ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம் – Diploma of Interpreting (ஆர்வத்தைப் பொறுத்து)
அசுத்திரேலிய தமிழ்க் கலாசாலை – எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் – தமிழ் ஆசிரியர் பட்டய படிப்பு

சீனா

சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம் – தமிழ் வகுப்புகள்
பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம் (இளங்கலை தமிழ் படிப்பு)

நமது மொழியின் பெருமையை நாம் இந்த உலகிற்கு எடுத்துக் கூற வேண்டும். சங்கம் வைத்த தமிழ் வளர்த்த நாம், இனி இணையம் வைத்துத் தமிழ் வளர்க்கத் தான் வேண்டும்.

திராவிடர்களின் பெருமைகளை அறிவோம்! தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறுவோம்!

வாழ்க தமிழ்! தமிழ் வெல்லும்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.