0

Enter your keyword

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

திராவிடம் என்னவெல்லாம் செய்தது என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டாமா? முதன்முதலில் திராவிடக் கட்சியின் ஆட்சி, காங்கிரஸ் அரசை வென்று  1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைகின்றது. அந்த ஆட்சியில் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேண்டிய அனைத்து அடிப்படை அடித்தளங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தி.மு.க பெருந்தொண்டாற்றி வருகிறது. முதலமைச்சர் அண்ணா அவர்களால் 1968-ஆம் […]

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

இதற்கும் திராவிடத்திற்கு என்ன சம்பந்தம்? எப்படி வந்தது இந்தச் சட்டம்? தானாக வந்துவிட்டதா? இல்லை. திராவிடத்தால் வந்தது. ஒரு குலப் பெண்களை இப்படி இழிவாகவும் விரும்பத்தகாத செயல்களிலும் வற்புறுத்தி ஈடுபடுத்துவது கண்டு வெகுண்டு எழுந்த திராவிடச் சித்தாந்தங்களை உள்வாங்கிய பெண்களால் வந்தது. யார் அந்தப் பெண்கள்? முத்துலட்சுமி ரெட்டி & மூவலூர் ராமாமிர்தம். அதுவும் இன்று நினைத்து நாளை சட்டமாக இயற்றி உடனே வந்துவிடவில்லை. பல தசாப்த ஆண்டுகாலப் போராட்டம். சென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் என்பது […]

சமூக இழிவு எது?

சமூக இழிவு எது?

சமூக இழிவு என்றால் என்ன? நம் நாட்டில் இந்தக் காலகட்டத்தில் உடனே அகற்ற விரும்பும் சமூக இழிவு எது என்று கேட்டால், அதற்கு மறுகணமே நமக்கு வரும் பதில் தீண்டாமை, மூடநம்பிக்கை, மதவெறி, இனவெறி, ஊழல், பெண்ணடிமை, பாலியல் கொடுமை, திரைத்துறை மோகம், போதைப் பழக்கங்கள், குடும்ப வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, முதியோர் இல்லம், விபச்சாரம், மோசமான நிர்வாகம், இயற்கை வளங்களைச் சூறையாடுதல், சாதி வெறி, கொத்தடிமைத் முறை என்றெல்லாம் அவரவர் கருத்திற்கேற்ப சொல்லப்படும். ஆனால், […]

திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்!

திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்!

இராஜாஜி அரசின் மும்மொழிக் கொள்கையின் காரணமாகத் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர். 1940-களின் முதல் பாதியில் உருவான இக்கொள்கை 1944-ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்றது. பெரியார் தலைமையிலான இயக்கம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றதும், இவ்வாண்டிலேயே. இவ்வாண்டில் (1944) சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் (16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு) வேறு பல தீர்மானங்களுடன், திராவிட நாடு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முழு தன்னாட்சி கொண்ட திராவிட […]

ஊருக்குத்தான் அறிவுரை!

ஊருக்குத்தான் அறிவுரை!

ராம்நாத் கோவிந்த் அவர்களை இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்த்திய போதும், இப்பொழுது திரு எல். முருகன் அவர்களை மத்திய இணை அமைச்சராக, பிஜேபியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியினர் பேசி வந்தது, வருவது, “நாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவரைத் தலைவராகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக சமூகநீதி பேசி வரும் திராவிடக் கட்சிகள் அப்படி செய்து இருக்கின்றதா?” என்பதே. ஆம். இதுவரை தலைவர் பொறுப்பில் ஒரு […]

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

என்னிடம் பல பேர், “உனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லையா? வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கும் இந்து மதத்தைத்தான் எதிர்க்கிறீர்கள், இந்த மதத்தில் இல்லை என்றாலும் வேறு மதத்திலாவது நம்பிக்கை இருக்கலாம். அல்லவா?” என கேட்பதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் ஏதோ ஒரு வகையில் பிற மதங்களை ஏற்றுக் கொள்ளாமல் தன் மதம் மட்டுமே சிறந்தது எனக் கூறுபவை ஆகும். இன்று நாம் அறிவியல் காலகட்டத்தில் இருப்பதால், எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையிலும், அதில் இருக்கும் […]

மொழிப்போர்!

மொழிப்போர்!

திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில், தொடர் செயல்பாடுகளில் ஒன்று மொழியுரிமைக்கான போராட்டங்கள், தமிழுக்காக உயிர் நீத்த, அடி வாங்கி ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகங்கள். ‘இந்தி’, ‘இந்து – இந்துஸ்தான்’ என்கிற ஒற்றைக் கலாச்சாரத்தில் இந்தியா சிக்காமல் இருக்கவும், குறிப்பாக இந்தி மொழியை தமிழர்கள் மீது திணித்தபோது வெகுண்டு எழுந்த தமிழ் இளைஞர்கள் நடத்திய ஒரு புரட்சிப் போராட்டமே மொழிப்போர்! இன்றளவும் இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தை தனித்து இயங்கச் செய்வதற்கு இந்த மொழிப்போர் போராட்டமே மிக […]

பெரியார் 143

பெரியார் 143

பெரியாரின் 143-வது பிறந்தநாளான இன்று எழுதும் இக்கட்டுரையில் பெரியாரின் வாழ்க்கையைப் பற்றியோ, அவரின் கொள்கைகளைப் பற்றியோ அல்லது அவரது வரலாற்றைப் பற்றியோ நாம் பேசப் போவதில்லை. இதெல்லாம் ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம்! அவற்றை தெரிந்துகொள்ள படிக்க புத்தகங்களும், இணையத்தில் பல காணொளிகளும் இருக்கின்றன. ஆனால் இன்று பேசப்போவது, பெரியார் எப்படி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்? இளைஞர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? 143 ஆவது பிறந்த நாளான இன்று சமூக வலைதளங்களில் பெரியாரை கொண்டாடி தீர்ப்பவர்கள் இளைஞர்களே! தான் […]

சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கம்.

திராவிடர் கழகத்தின் வரலாறு நாம் படிக்கும் பொழுது அதன் ஆரம்பப் புள்ளி சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவோம். பெரும்பாலும் திராவிடர் கழகத்தைப் பற்றிப் பேசும் இன்றைய தலைமுறையினர் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே திராவிடர் கழகத்தின் ஆணிவேரான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இன்று காண்போம். சுயமரியாதை இயக்கம் (Self-Respect Movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும், அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925-ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களால் […]

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

ஒரு பிரிவினர் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது. இந்தியா விடுதலை அடைந்ததற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு உயர் பதவிகள், 90% அரசு வேலைகள் மற்றும் தனியார் நிறுவன  உயர் பதவிகள் என அனைத்திலும் இருந்தனர். அரசு பதவிகள் மட்டுமில்லாமல் அரசியல் இயக்கங்களிலும் கூட இவர்களது ஆதிக்கமே அதிகமாய் இருந்தது. ஒரு சிறு மக்கள் தொகை உள்ள அச்சமூகம், அதிகப்படியான மக்கள் தொகை […]