0

Enter your keyword

கு. வெ. கி.ஆசான்!

கு. வெ. கி.ஆசான்!

கு. வெ. கி.ஆசான்!

தமிழ் தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னை சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல் கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர்.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவராகவும் திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பல்வேறு திராவிட இயக்கங்களில் பல பொறுப்புகளையும் ஏற்றுத்   திறம்பட பணியாற்றியவர்தான் கு. வெ. கி.ஆசான்.

திராவிட இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இவர் பெயர் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஆனால் சாமானிய மக்களுக்கும் இந்தக் கால இளைஞர்களுக்கும் இவரை தெரிந்திருக்குமா என்றால் அது கேள்விக்குறியே?!

கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையில்  1935ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிறந்தவர்.

இவர் பல்துறை வித்தகர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டயம் பெற்றவர். இவர் சட்டம் பயின்று கோவையில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் மனைவியின் பெயர் சாரதாமணி. இவருடைய மகள் உமா, மகன்கள் செந்தில், குமார் ஆகியோர் உள்ளனர். இன்று அவர் நம்மிடையே இல்லை என்பது ஒரு பெரிய இழப்பு என்றாலும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் திராவிடத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் வாய்ந்தவர். திராவிடர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைமையகச் செயலாளராகவும் இவர் இருந்தார். மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார், பாவேந்தர், பெரியார், ஈழத் தமிழர் உரிமைப் போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார், பெண்ணிய அடையாளம்  உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

குமரன் ஆசான் அவர் எழுதிய நூல் பதிப்புகள் மீது ஆர்வம் கொண்டமையால் தனது பெயரை கிருஷ்ணசாமி ஆசான் என்ற பெயரை  சூட்டிக்கொண்டார்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரிச்சர்டு டாக்கின்சன் எழுதிய  – THE GOD OF DELUSION நூலை தமிழில் கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இந்த நூலை வாசித்தால் பல விடயங்கள் நமக்கு தெரியவரும் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

அதுமட்டுமில்லாமல் விடுதலை நாளிதழ் மற்றும் தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில மாத இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தவர், திருச்சியில் இயங்கி வந்த பெரியார் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக மூன்று ஆண்டுகளும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில், திராவிட இயக்கம் மற்றும் அதன் கொள்கைகள் ஆகிய பொருள்களில் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வந்தவர். இவரிடம் பயிற்சி பெற்ற எண்ணற்ற பெரியாரிய தோழர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை மையத்தின் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தவர். பெரியார் பேருரையாளர் என்று கைலாசம் அறக்கட்டளை இவருக்கு விருது அளித்துள்ளது. தன் இறுதி மூச்சுவரை பெரியாரையும் திராவிட கொள்கைகளையும் பலரிடம் எடுத்துச்சென்று சேர்த்தவர் நமது ஆசான் அவர்கள்.

ஆனால் இவரைப் பற்றி அறிந்தவர் சிலர்! அறியாதவர் பலர்! இப்பேர்பட்ட மனிதர்களை அறிந்து தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களின் புகழை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையே!

இப்பேர்பட்ட மனிதர்களால் தான் இன்றளவும் திராவிடம் தழைத்தோங்கி நிற்கிறது. தமிழையும் தமிழரையும் நமது தொன்மையையும் காக்க வேண்டுமென்றால் திராவிடத்தை காக்க வேண்டும். உலகத்தை காக்க வேண்டும் என்றால், இப்படி திராவிடத்தை போற்றிப் பேணி காத்த திராவிடர்களையும் நாம் அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.