0

Enter your keyword

இப்படியும் அழைக்கலாமே!

இப்படியும் அழைக்கலாமே!

நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திப்போம் அதில் பல முகங்கள் நமக்குத் தெரிந்தவையாக இருந்தாலும் அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது. அவர்களை அவர்கள் செய்யும் வேலையைகொண்டே நாம் அடையாளப்படுத்தி நினைவு வைத்திருப்போம். ஓட்டுநர், நடத்துனர், குப்பைக்கார அம்மா/அய்யா, பூ விற்பவர், காய்கறி விற்பவர், காவலாளி, நம் அலுவல ஊழியர்கள் பலரையும் அவர்களின் பதவியை வைத்துத் தான் நாம் அழைக்கிறோம். நமக்கு மேல் பதவியில் இருப்பவர்களைப் பொதுப்படையாக சார் என்று மேடம் என்றும் அழைத்து விடுகிறோம். இப்படி […]

மெட்ராஸ் தினம்!

மெட்ராஸ் தினம்!

இன்று சென்னையின் 382 ஆவது பிறந்தநாள்! முதலில் மதராஸ் மாகாணம் பிறகு மெட்ராஸ் ஆக மாறி இன்று சென்னையாக கம்பீரமாக நிற்கிறது! சென்னைக்கும் திராவிடத்திற்கு மிகப்பெரிய தொடர்பு உண்டு! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது சென்னையில் தான். திராவிட கட்சிகள் சென்னையில் உருவாவதற்கு இதுதான் அச்சாணி. நீதிக்கட்சி ஆரம்பித்தது சென்னையில் தான்! அதன் நீட்சியாக அரசியல் இயக்கமாக பின்னாளில் பல திராவிடக்  கட்சிகள் உருவானாலும் இன்று ஆண்டுகொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் சென்னையில் இருக்கும் […]

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது. இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட தருணம் இது. ஐம்பது-அறுபது ஆண்டுகள் முன் தந்தை பெரியார் எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தாரோ, எந்த திட்டத்தை  கலைஞர் கருணாநிதி சட்ட வடிவமாக கொண்டு வந்தாரோ, அந்தத்  திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது; குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இனி எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறி இருக்கின்றது. […]

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

சுயமரியாதை திருமணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் அதை செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்னடா இதுவும் திருமணம் தானே இதில் என்ன பெருசாக சேமித்து விடப் போகிறீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? இந்திய கல்யாண சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடிக்கும் மேல். அதுமட்டுமில்லாமல் 25 முதல் 30 சதவீத வளர்ச்சியில் அது ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் திருமணம் செய்யும் […]

கலைஞரும் தொழு நோயாளிகளும்!

கலைஞரும் தொழு நோயாளிகளும்!

ஆகஸ்ட் 7, 2018  கலைஞர் கருணாநிதி அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வரத் துவங்கிவிட்டன. கலைஞர் மறைந்த செய்தி கேட்டு அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட வருத்தமான மனநிலையிலிருந்தனர். அந்தக் காப்பகத்தில் இருபது ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தொழுநோயாளி தழுதழுத்த குரலில் பேசுகையில், “கலைஞர் இல்லையென்றால் நானும் எனது கூட்டாளிகளும் தெருக்களில் தள்ளப்பட்டிருப்போம்” என்று கூறுகிறார். “நாங்கள் பிச்சையெடுப்பது கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று மிகுந்த மனவருத்தத்துடன் கூறுகிறார், எங்களுக்கு என்று […]

சாமி – யார்?

சாமி – யார்?

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள். பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித்  தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர். சரி நமது தலைப்புக்கு வருவோம்! சாமி – யார்? […]

கு. வெ. கி.ஆசான்!

கு. வெ. கி.ஆசான்!

தமிழ் தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னை சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல் கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவராகவும் திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் பல்வேறு திராவிட இயக்கங்களில் பல பொறுப்புகளையும் ஏற்றுத்   திறம்பட பணியாற்றியவர்தான் கு. வெ. கி.ஆசான். திராவிட இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இவர் பெயர் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஆனால் சாமானிய மக்களுக்கும் இந்தக் கால இளைஞர்களுக்கும் இவரை […]

கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கே.ஆர்.வேணுகோபால் சர்மா!!! பல பேர் அறிந்திடாத பெயர்! ஆனால் அண்ணாவால் “ஓவியப் பெருந்தகை” என்று பட்டம் சூட்டப்பட்டார். தமிழகத்தில் இவர் வரைந்த ஒரு ஓவியத்தை பார்க்காத ஒருவர் இருக்கவே முடியாது. இந்தியாவில், உலகத்தில் அத்தனை பேரும் ஒருமுறையேனும் இவரது அந்த ஒரு படைப்பைக் காணாமல் இருக்க மாட்டார்கள். திருக்குறளைப் பற்றி தேடுபவர்கள் இவரின் அந்தப்  படைப்பைக் கண்டே ஆக வேண்டும்! யூகித்து விட்டிர்களா ? ஆம்! அய்யன் திருவள்ளுவர் திருவுருவ படத்தை வரைந்தவர் தான் இந்த வேணுகோபால் […]

எதிலும் வேண்டும் சமூக நீதி!

எதிலும் வேண்டும் சமூக நீதி!

அனைத்து துறைகளிலும் சமூகநீதி தேவைப்படுகிறது. ஏனென்றால் பல ஆண்டு காலமாக நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மேல் வரச்செய்வதே சமூகநீதியின் ஒரே கோட்பாடு. பிற எல்லா இடங்களிலும் சமூக நீதி, அரசியல் அமைப்பு சட்டத்தால் நமக்கு கிடைத்தாலும்  பெரும்பாலும் ஒரு இடத்தில் மட்டும்  யாரும் கண்டுகொள்வதே இல்லை. எந்த இடம் அது? கோவில்களே அந்த இடம். சனாதனதர்மத்தின்படி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் நசுக்கப்படுகிறோம் என்று தெரிந்தும், இடைநிலை சமூக மக்கள் தங்கள் எதிர்ப்பை சனாதன கூட்டத்தின் மேல் காட்டாமல், […]