OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

நேற்று (29-07-2021) திராவிடத்தின் வரலாற்றில் இன்னொரு மைல்கல்!
இந்தியாவை திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூற்று நேற்று நடந்தது. இதுவரை (OBC) என்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கொடுக்க வேண்டிய இடங்களை கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வந்தது! இன்று அப்பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது முற்றிலும் திராவிடத்தின் திராவிடக் கட்சியின் செயல்பாடுகளால் கிடைத்த வெற்றி. உடனே சங்கிகள் இது எங்கள் மோடி தானே கொடுத்தார் அது எப்படி திராவிட கட்சிகள் மார்தட்டிக் கொள்ளலாம் என்று கேட்பார்கள்?
இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை போட வைத்தது, அந்த திராவிடம் தான்; ஏனென்றால் உச்ச நீதிமன்றம் ஒரு கொட்டு கொட்டிய பிறகு தான் வேறு வழி இல்லாமல் ஒன்றிய அரசு செய்திருக்கிறது. இல்லை என்றால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி சட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கும் மோடி அரசு உட்படுத்தப்பட்டு இருக்கும்.
அது என்ன OBC ஒதுக்கீடு என்று கேட்பீர்கள்? வருகிறேன்!
தற்போதைய நடைமுறையின்படி, மாநிலங்களில் உள்ள அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், மத்திய தொகுப்புக்கு என அவற்றின் 15 சதவீத இடங்களை இளநிலை படிப்புக்கும், 50 சதவீத இடங்களை மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேல்படிப்புக்கும் வழங்கிட வேண்டும். இந்த மத்திய ஒதுக்கீடு இடங்கள்தான் மத்திய தொகுப்பு (Central Pool) என அழைக்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு, உயர் கல்வி நிறுவனங்கள் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்த மோதி அரசு, அரசியலமைப்பு விதியில் செய்த திருத்தத்தின் விளைவாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) உயர் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வழி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையிலும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்தது.
அதை தான் சட்ட போராட்டமாக திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்று இன்று கிடைக்க வழிவகை செய்துள்ளது.
இதனால் இந்நாள் வரை நீட் நுழைவுத்தேர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் இனி பிற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு சலுகையை பெறுவர்.
மற்ற மாநிலங்களில் யாருக்கும் இல்லாத அக்கறை எதற்கு இந்த திராவிட கட்சிக்கு மட்டும் இருக்கிறது என்றால் அவர்கள் சார்ந்திருக்கும் திராவிடமும் சமூக நீதியும் நான் அவர்களை என்றென்றும் மக்களின் பால் சிந்திக்க வைக்கிறது. மற்ற மாநிலத்தின் எந்த ஒரு மாநில கட்சியோ, தேசியக் கட்சியோ பேசாத பொழுது திராவிட கட்சியான திமுக எம்பி வழக்கறிஞர் வில்சன் தான் முதன் முதலில் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
பிறகு பிரதமர் மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்டது திராவிட முன்னேற்றக் கழகம்! திருச்சி சிவா அவர்கள் இந்த கேள்வியை முன்வைத்தார். பலமுறை திமுக எம்பிக்கள் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு செவி சாய்க்காததால் உச்சநீதிமன்றத்தை நாடியது திராவிட முன்னேற்ற கழகம். இதன் வழி காட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக. உரிய இட ஒதிக்கீடு தருகிறோம் என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனாலும் இந்த வருடம் முடியாது என்றே கூறினர். தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தினாலும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த காரணத்தினாலும் இன்று நமது கோரிக்கைக்கு உட்பட்டு இறங்கி வந்து இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு.
இந்தியாவிற்கே சமூக நீதி காவலர் வி. பி. சிங் அரசு மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதிக்கீடு அமல்படுத்த முக்கிய காரணமாக இருந்தது திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கலைஞர் கருணாநிதி என்பது மாற்ற முடியாத வரலாறு!
சமூக நீதியின்பால் என்றென்றும் அற வழியில் நடக்கும் ஒரே இயக்கம் திராவிட இயக்கம்தான். நமக்கென்ன என்று இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேர்த்தே போராடும் இயக்கம். திராவிடம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது தான் இந்தியாவில் நிலவும் ஜனநாயகம் கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு மாநிலத்தில் வேர்விட்டு பரவிக்கிடக்கும் திராவிடம் இந்தியா முழுவதும் பரவினால் சமூகநீதியும் சுயமரியாதையும் இன்னும் தழைத்தோங்கி நாடே வலுப்பெறும்.
வாழ்த்துக்களுடன் இன்னும் மென்மேலும் மக்களுக்காக சமூகநீதி திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்துக்களுடன் திராவிடன் குழு.
திராவிடத்தின் பால் பயணிப்போம்! திராவிடத்தால் வாழ்ந்தோம்!
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்நாடு!
—
திராவிடன்
No Comments