0

Enter your keyword

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்காற்றிய  இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் போராட்டமாகட்டும், இந்திய தேசிய ராணுவமாகட்டும் அல்லது இப்போதிருக்கும் ராணுவம் ஆகட்டும் எல்லா வேளையிலும் நம்முடன் உடன்பிறவா சகோதரர்கள் ஒன்றுபட்டு நின்று இன்றுவரை நாட்டை காத்து வருபவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள். ஆனால் இன்று அவர்கள் மேல் எப்பேர்பட்ட சேற்றை வாரி இந்துத்துவ கும்பலால் பூசப்படுகிறது என்று நாம் அறிவோம்!

தமிழகத்தில் திராவிடம் தழைத்தோங்கி இருப்பதால் இங்கு குஜராத்தை போல உத்தரபிரதேசத்தை போல மத்தியபிரதேசத்தை போல இந்துத்துவ வெறி கும்பலால் ஆட்டம் போட முடியாமல் அடக்கி (அடங்கி) வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஒரே காரணம் திராவிடம்! அதை கடைக்கோடி தமிழன் வரை அறிய வைத்த பெரியார், அண்ணா போன்றோர்.  இவர்கள் மேல் எண்ணற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும் வேளையில் நமது நாட்டிற்காகவும் போராடி உயிர் நீத்த பல சகோதரர்களின் பெயர் வரலாற்றில் லாவகமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அல்லது மக்களுக்கு அறியாதவாறு ஊடக வெளிச்சமும் சமூக வலைதள வெளிச்சமும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அப்பேர்ப்பட்ட சகோதரர்களையும் நாம் அனைவருக்கும் தெரியப் படுத்துவது தானே நம் கடமை. வாருங்கள் நீங்கள் அறியாத சில இஸ்லாமிய சகோதரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

மெமன் அப்துல் ஹபீப் மர்பானி:

குஜராத்தி பணக்காரர்கள் காந்திஜியின் அகிம்சை சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி உதவி அளித்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு சௌராஷ்டிரா ஜாதி டவுனில் இருக்கும் மெமன் அப்துல் ஹபீப் மர்பானி தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். 1940களில் ஒரு கோடி என்பது மிகப்பெரிய ரொக்கம் ஆகும்.

இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜிக்கு முதன்முதலில் பண உதவி செய்தவர் அவரே. பிறகுதான் ரங்கூன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து நிதி உதவி வர ஆரம்பித்தது. அவர் அளித்த நிதி உதவியை பாராட்டி இந்திய தேசிய ராணுவத்தின் மிக உயரிய விருதான சேவக் இ ஹிந்த் பதக்கத்தை முதன்முதலில் அவருக்கு அளித்து கௌரவித்தார் நேதாஜி. இது என்ன புது புரட்டு என்று சங்கிகள் கம்பு சுத்த வர வாய்ப்பு இருப்பதால் வரலாற்று ஆய்வாளர் ராஜ் மால் கஸ்லிவால் அவர்கள் மேமன் நிதி அளித்ததையும் அதை நேதாஜி பெற்றுக் கொண்டதையும் ஆவணப்படுத்தியுள்ளார். இவை நேதாஜி நிதி பெறும் பொழுது உதிர்த்த வார்த்தைகள்  

சகோதரர்களே ! மக்கள் தங்கள் கடமைகளை உணர தொடங்கியதில் நான் இன்று மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லாவற்றையும் தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள், ஹபீப் ஷெத் செய்திருப்பது பாராட்டத்தக்கது!தாயகத்திற்கு சேவை செய்வதில் அவரைப் பின்பற்றுபவர்கள் உண்மையில் பாராட்டத்தக்கது.

ஹபீப் ஷெத் அவர்களின் சந்ததியினரை அழைத்து இன்றும் கௌரவிக்கப்படுகிறார்கள் ஆனால் இதையெல்லாம்  விழாவில் கூட குறிப்பிடாமல் வசதியாக மறைத்து விடுகிறார்கள் குஜராத் மற்றும் மத்திய அரசு அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள். ஏனென்றால் அங்குதான் இருக்கிறது அவர்கள் இந்துத்துவ வெறியும் இஸ்லாமிய எதிர்ப்பு அந்த சமூகத்தின் மேலான வன்மமும்.

ஹுசைன் முஷ்டாக் ரந்தெரி:

அதுமட்டுமில்லாமல் இந்திய தேசிய ராணுவத்தில் ஆள் தேர்வு பிரிவு அதிகாரியாக இருந்த வரும் ஒரு இஸ்லாமியர் தான் அவர் பெயர் ஹுசைன் முஷ்டாக் ரந்தெரி. இப்படி வரலாற்றில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட பல இஸ்லாமியர்களின் பெயர் வெளியில் தெரியாமலேயே போயிருக்கிறது. அப்படித் தெரியாமல் போல இன்னும் சில பெயர்கள் உண்டு அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அறியாததை அறிய செய்வோம்! ஆரிய புரட்டுகளை துடைத்தெறிவோம்!

வாழ்க தமிழ்! தமிழ் வெல்லும்!


திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.