0

Enter your keyword

நூலிபான்கள்!

நூலிபான்கள்!

நூலிபான்கள்!

காந்தியை சுட்ட கோட்ஸேவும் , சாவர்க்கரும் (ஒரே படத்தில்)

இன்று இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கும் சொல்! “நூலிபான்கள்“.

ஒரு மனிதத்தன்மையற்ற கும்பலை குறித்து ஒருவர் தனது பேச்சில் எழுதிய சொல் இன்று இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.
டேனிஷ் சித்திக்கி, ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களும் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்கு பலரும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து கொண்டிருந்த வேளையில் ஒரு கும்பல் மட்டும் ஆனந்த கூத்தாடி கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இறந்த அந்த மனிதர் மீது அவதூறு மற்றும் காழ்ப்பு உணர்வோடு இணையத்தில் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தனர். எதற்காக அவர் மீது இவ்வளவு வன்மம் அவர்களுக்கு? அதாவது நூலிபான்களுக்கு?

ஒரே காரணம்தான்!

அவர் மோடி அரசின் உண்மை முகத்தை புகைப்படங்களாக எடுத்துக் காட்டி விட்டார்.

லாக் டவுனில் கால்கடுக்க வட இந்திய மக்கள் சோறு தண்ணி இல்லாமல் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்ததை தனது புகைப்படங்களால் வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் இவர்.

குவியல் குவியலாக பிணங்கள் எரிந்து கொண்டிருந்ததை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டியவர் இவர் அதுவரை மரணங்கள் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டு வந்ததை தனி ஒருவனாக வெளிச்சம் போட்டு காட்டினார்.

அதுமட்டுமா? இந்துத்வா அமைப்பின் முக்கிய நபர் ஒருவர் டில்லி கலவரத்தில் துப்பாக்கியை எடுத்து நீட்டும் அந்த புகைப்படமும் இவர் எடுத்தது தான்.

இப்படி மோடி அரசின் பல்வேறு உண்மை முகத்தையும், அரசின் தோல்விகளையும், தனது புகைப்படங்களால் கேள்வி கேட்பது தான் அவர் செய்த ஒரே தவறு(!) அதற்காக தான் அவரின் மரணத்தை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரித்து இத்தகைய ஒரு மனிதத்தன்மையற்ற காரியத்தை அரங்கேற்றியுள்ளனர் இந்த நூலிபான்கள்! இதைக் கண்டு கோபம் கொண்ட ஒரு சாமானியன் எழுதிய சொல்லாடல் தான் “நூலிபான்கள்”.

இந்தச் சொல்லுக்கு நாம் எப்படி பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வலதுசாரிகள் கூறுவது போல இது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்துமாரு போட்டிருக்கிறார்கள் என்று அல்ல?
யாரெல்லாம் டேனிஷ் சித்திகின் மரணத்தை கொண்டாடினார்களோ, அவதூறு பரப்பினார்களோ, அவர் மீது வன்மத்தை கொட்டி தீர்த்தார்களோ அவர்களை சுட்டிக்காட்ட எழுதியதுதான் ‘நூலிபான்கள்’ என்ற சொல்லாடல்.

ஒரு சாதாரண மனிதனின் வேதனையின் வெளிப்பாடு இத்தகைய சொற்களை உருவாக்குகிறது. இது ஒருவரை கேவலப்படுத்த அல்ல தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அதை ஒரு சொல்லாக கட்டமைக்கிறார்கள். சங்பரிவார் என்பதிலிருந்து மருவி உருவாக்கப்பட்டதே சங்கி. தாலிபன்கள் என்று ஒரு தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருக்கிறது அவர்கள் ஷரியா சட்டம் பின்பற்றி மிகவும் கொடுங்கோலாட்சி புரிபவர்கள் அவர்களைவிட மிகக் கொடூரமான எண்ணங்களைக் கொண்டவர்கள் குறிப்பிடவே கோபத்துடன் ஆற்றாமையுடன் இப்படி ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எப்படி பார்ப்பனியம் என்பது ஒருவித ஆதிக்க மனநிலையோ எப்படி அது ஆதிக்க மனநிலை உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பொருந்துமோ அப்படித்தான் இந்த நூலிபான்கள் ஒரு மனிதத் தன்மையற்ற எந்த உயிரினங்களிலும் சேர்த்துக் கொள்ள முடியாத ஒரு வகையாக பாவிக்கப்படுகிறார்கள். பல நூறு வருடங்களாக ஜாதிய கொடுமையால் அவதிப்பட்டு பிற மதங்களை தழுவுபவர்களை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் (rice bag convert)
சோற்றுக்காக மதம் மாறியவர்கள் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்நாட்டில் இப்படிப்பட்டவர்களை ஒரு சொல்லாடல் வைத்து அழைப்பது தவறல்ல. எப்படி இன்று சங்கி என்று சொன்னால் பலர் அவமானமாக கருதுகிறார்களோ அப்படி இந்த சொல்லாடலை யாராவது நம் மீது பயன்படுத்தி விடப் போகிறார்கள் என்றாவது கொஞ்சம் மனிதத் தன்மையுடன் இவர்கள் நடப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இப்படி ஒரு சொல்லாடலை வைத்து இன்று சமூக வலைத்தளத்தில் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்படியாவது அந்த கும்பல் திருந்துமாயின் அது நாகரீக சமூகத்தின் வெற்றியே!

ஆனால் இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் இப்பேர்ப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்ற ஒருவித அச்சமும் வருகிறது. நமது முக்கிய பணி இப்பேர்பட்ட புற்றுநோய் போன்ற ஒரு மனநிலையை சமூகத்தில் பரவாமல் தடுத்து நிறுத்தி ஆரம்பத்திலேயே துடைத்து எறியப்பட வேண்டும். ஆகவே மக்களே தமிழகத்தில் சுயமரியாதை உள்ளவர்கள் சாமானியர்கள் எப்படி சங்கி என்ற சொல்லாடலை ஒரு நகைப்புக்குரிய ஏற்றுக்கொள்ள முடியாத சொல்லாக நினைக்கிறார்களோ அப்படி இந்த நூலிபான்கள் என்ற சொல்லும் பரவலாக்கப்பட வேண்டும்.

மனிதம் போற்றுவோம்! தமிழகத்தை ஆரியத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவோம்!

வாழ்க தமிழகம்!

தமிழ் வெல்லும் !

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.