0

Enter your keyword

சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி!!!

தமிழகத்தில் அந்தப் பெயரை கேட்டாலே ஒன்று கிண்டலாக பேசுகிறார்கள், அல்லது மிகவும் அருவருக்க தக்க சொல்லாக பார்க்கிறார்கள். ஒருவரை வாய் தவறி சங்கி என்று குறிப்பிட்டு விட்டால் ஒன்று பதறி விடுகிறார்கள் அல்லது மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது. சமீபத்தில் எங்களை சங்கி என்று தங்களை அடையாளப் படுத்த வேண்டாம் என கமல், ரஜினி போன்றோர் பதறியது இதற்கு சான்று! அந்த அளவுக்கு வெறுக்கத்தக்க வார்த்தையா சங்கி? ஏன் தமிழ்நாட்டில் அச்சொல்லை மிகவும் ஏளனமாகப் பார்க்கிறார்கள்?

சரி சங்கி என்ற சொல் எப்படி வந்தது என்று பார்ப்போம்?

சங்கப் பரிவார் என்ற வார்த்தை சங்கி என்று சுருக்கப்பட்டது. இந்த சங்கப் பரிவார் என்பது இந்து தேசிய வாத கொள்கைகளை கொண்ட குடும்பம் என்று பொருள். ஆர்.எஸ். எஸ் (RSS) கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் உருவாக்கி நடத்தப்படும் அமைப்பே சங்கப் பரிவார் என்று அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு அமைப்புகள் உள்ளன. ஆனால் அவர்கள் குறிக்கோள் ஒன்றுதான் மத துவேசம், மதவெறி, இந்து ராஷ்டிரம்.

அடடே ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் சுருக்கமா சங்கி? மற்ற மாநிலங்களில் இவை அனைத்தும் மிகவும் பலமான அமைப்புகள் ஆயிற்றே? பல மாநிலங்களில் முதலமைச்சர் நாற்காலியை முடிவு செய்யும் அமைப்புகள் ஆயிற்றே?அதில் இருப்பதை பல லட்சம்பேர் பெருமையாக கருதுகின்றனர். அப்பேர்ப்பட்ட அமைப்பின் சுருக்கத்தை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் ஏளனமாக பார்த்து சிரிக்கிறார்கள்? அச்சொல்லை தங்களுக்கு சூட்டி விடுவார்களோ என்று அவமானப் படுகிறார்கள்? பயப்படுகிறார்கள்?

ஏனென்றால் இது தமிழ்நாடு! இங்கு மத துவேஷம் பலிக்காது! மதவெறியை தூண்டி விட்டு கலவரம் ஏற்படுத்த முடியாது! வட நாட்டில் இருக்கும் மதவெறி இங்கு கிடையவே கிடையாது. காரணம் திராவிடம், பகுத்தறிவு, சுயமரியாதை, பெரியாரைப் போன்ற தலைவர்கள் மக்களுக்கு சிந்திக்கும் திறனை ஊட்டி வளர்த்தமையால் எல்லா விதத்திலும் தமிழகம் வட மாநிலங்களை விட முன்னேறியிருக்கிறது அறிவிலும், சிந்திப்பதிலும், குறிப்பாக பகுத்தறிந்து பார்ப்பதிலும்.

அது சரி மேற்கூறியவற்றில் எதையும் செய்யாத நாம் எதற்கு இவர்களைப் பார்த்து இப்படி கேலியும் கிண்டலும் செய்ய வேண்டும்? ஏனென்றால் ஒரு மாநிலமே அறிவு சார்ந்து சிந்தித்து கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது அறிவிற்கு அப்பாற்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதில் இவர்கள் சங்கிகள் வல்லவர்கள்.

பெரும்பாலான மக்கள் அறிவார்ந்த சிந்தனையில் சிந்திப்பதும், இவர்கள் மிகவும் சிறுபான்மையாக இருப்பதாலும் இவர்கள் நமக்கு ஜோக்கர்களாக தெரிகிறார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால், நாம் வெளிப்படையாக எதிர்க்கும் எதையும் இவர்களால் எதிர்க்க முடியாது. அந்த விடயம் ஏற்படுத்தும் தாக்கத்தை அனுபவித்துக் கொண்டும் அது தப்பு என்று தெரிந்தும் அதற்கு வேறு வழி இல்லாமல் முட்டுக் கொடுத்துக் கொண்டும் அதே நேரத்தில் பெரும்பான்மை மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டும் தங்கள் வலிகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்கள் தான் இந்த சங்கிகள்.

அவர்கள் உலகம் வேறு! சிந்தனையை வேறு! அவர்கள் வாழும் வாழ்க்கையே வேறு! ஆனாலும் மனம் தளராமல் தனது தலைமை கூறுவதை செவ்வனே செய்யும் நவீனகால அடிமைகள். ஒருவர் எப்படி பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று விட்டால் மட்டும் அவர் படித்தவர் ஆகிவிட முடியாதோ, அப்படி என்னதான் பெரிய பெரிய படிப்புகள் படித்திருந்தாலும் இவர்கள் சங்கிகளாக மாறும் பொழுது அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். குறிப்பாக மூளையை பயன்படுத்தவே மாட்டார்கள்!

நீங்கள் எல்லாம் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது என்று பார்ப்பனியம் சொன்னாலும் பல்லை இளித்துக்கொண்டே சரி என்று மண்டை ஆட்டுவதே சங்கி ஆகும்.

கொஞ்சம்கூட தொடர்பே இல்லாமல் எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானையும் நேரு குடும்பத்தையும் காரணமாக சொன்னா முடிவு செய்துவிடலாம் அவர்கள் சங்கி என்று.

இது தவிர மாடு, கோமியம், பாரதமதா, இந்து ராஷ்டிரம், இந்துக்களே வாருங்கள் போன்ற வார்த்தைகள்.

குறிப்பாக பெரியாரை இகழ்வது போன்றவற்றை வைத்து இவர்களை இனங்கண்டு கொள்ளலாம்.

பெரும்பாலும் இப்பேற்பட்ட சங்கிகளை உருவாக்குவதில் பார்ப்பனியம் இரண்டு விதமாக கையாளும். இதற்கு பலியாவது பெரும்பாலும் இடைநிலை சாதியினர்தான். ஏனென்றால் அவர்கள்தான் அடி, உதை முதல் இவர்கள் போடும் சட்டத்திலேயே பாதிக்கப்படும் கனவான்கள். ஆனால் களத்தில் நின்று போராடி அனைத்து வலிகளையும் தாங்குவது இவர்கள்தான். பதவி என்று வரும் பொழுது இன்னொரு கும்பல் இதன் மூலமாக ஆதாயம் அடைவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அவர்கள் யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் நாம் கவனிக்க வேண்டிய இன்னொன்று இவர்களை நாம் காமெடியாக பார்த்தாலும் இந்த நாட்டிற்கும் இந்த சமுதாயத்திற்கும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். என்னதான் சிறுபான்மையாக இருந்தாலும் ஒரு துளி விஷம் ஒரு குடம்பாலை கெடுத்துவிடும் என்பதைப்பல வருங்கால சந்ததிகளின் மனதில் விஷத்தை விதைக்கக் கூடிய பலம் வாய்ந்தவர்கள் இவர்கள். ஆகையால் இவர்களை திருத்தி இந்த நாட்டை அழிவுப் பாதையில் இருந்து மீட்பது நமது கடமையாகும்!

இவர்களுக்கு திராவிடம் என்னவென்று புரிய வைத்துவிட்டால் போதும் தானாக தெளிந்து திருந்தி வெளியே வந்துவிடுவார்கள்!

தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!

திராவிடன்

No Comments

Post a Comment

Your email address will not be published.