ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?
சாதிப் பிரச்சினைகள் ஒழிய வேண்டுமென்றால் நகரமயமாக்கல் தான் ஒரே தீர்வு என்று அன்றே பெரியார் சொன்னார்!
பெரியார் இதைக் கூறியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் அதுவும் இந்த தீர்க்கதரிசன பார்வை எப்படி அவருக்கு வந்தது என்பது வியப்புதான்?
நகரங்கள் உருவாக்கிவிட்டால் ஜாதிகள் ஒழிந்து விடுமா? இன்னமும் ஜாதி சான்றிதழ் எல்லா இடத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் தானே? அல்லது ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம்.
ஒழிந்துவிடும் என்பது தனி மனிதரை கொண்டு பார்க்காமல் ஒரு சமூகமாக கொண்டு பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் நகரங்களிலும், பெருநகரங்களிலும் ஜாதி வேற்றுமை, தீண்டாமை, கொடுமை எல்லாம் மிக மிக சொற்பமாக காணப்படுகிறது கிராமங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில்!
எதற்காக அப்படி சொன்னார் பெரியார்?
60 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கண்ட காட்சி நகரங்களில் ஜாதி பெயரை கேட்காமல் மக்கள் பழகியது!
அதன் நீட்சியாக இந்த நூற்றாண்டு வருவோம், இன்று சென்னை மாநகரில் அல்லது இன்னும் சில வளர்ந்த மாநகரங்களில் (தமிழ்நாடு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளவும்) பொதுவெளி சமூகத்தில் ஜாதி தீண்டாமை அறவே பார்க்க முடியாது!
ஏனென்றால் இங்கு இரட்டை குவளை முறை கிடையாது இன்னும் சில கிராமங்களில் உண்டு!
ஜாதி மதம் கேட்டு இங்கு பெரும்பாலும் யாரும் வீடு வாடகை விடுவது கிடையாது!
இந்தத் தலைமுறை நகரத்துப் பிள்ளைகளுக்கு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாது ( ஒரு சிலரை தவிர அது அவர்களின் பெற்றோர்கள் காரணமாக)
மறந்து கூட ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைப்பதே கிடையாது!
குறிப்பாக ஜாதி பெயரை வைத்து மனிதர்களை அழைப்பதே கிடையாது!
அதைவிட ஒரு ஜாதிக்கு என்று தனியாக ஒரு இடத்தை உருவாக்குவது கிடையாது (உடனே சில தேசபக்தர்கள் இஸ்லாமியர்கள் மட்டும் தனியாக கூட்டமாக ஒரே இடத்தில் வாழ்வது இல்லையா இன்று அறிவுபூர்வமாக ஒரு கேள்வியை முன் வைப்பார்கள்) அது அவர்கள் காலங்காலமாக வாழுகிற இடம் என்பதால் அப்படி கூட்டமாக தெரியும் ஆனால் நகரங்களில் பரவலாக எல்லோரும் சீராக கலந்து தான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
நகரங்களில் பெரும்பாலும் ஜாதி சண்டையோ மதக்கலவரங்கள் வருவதே கிடையாது!
இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று ஒரே ஒரு நகரத்தில் பொதுமக்கள் இடம் பெறுவதை விட பல நகரங்கள் உருவாக்கினால் வளர்ச்சி சீராக இருக்கும்!
ஆமாங்க இங்க சென்னையை தவிர வேறு எந்த மாநகரம் வளரவில்லை என்று சொல்லிகிட்டு சில தமிழ்தேசிய பிள்ளைகள் வருவார்கள் அவர்களுக்கு என்று தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன் அதைப் படித்துக் கொள்ளுங்கள்!
ஏன் தமிழ்நாட்டில் மட்டும் மத அரசியலை புகுத்த முடியவில்லை என்று ஆர்எஸ்எஸ் இன்றுவரை சிந்தித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு விடயம்? அது அவர்களுக்கு ஏற்படும் ஐயமும் கூட? இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் அதிக நகரமயமாக்கல் நடந்தேறியது தமிழகத்தில் மட்டுமே!
இங்கு பல மாநகராட்சிகள் உள்ளன பல நகரங்கள் உருவாகியுள்ளன ஆனால் மற்ற மாநிலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு நகரங்கள் இருக்கின்றன! இல்லை இல்லை என்று குஜராத் மாடலை தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு நமது தமிழ்நாட்டு வரைபடத்தை காட்டினால் போதும் அவர்களுக்கு புரிந்துவிடும்!
இன்னும் முன்னேற்ற பாதையில் தமிழகம் செல்லவும் மக்களின் வாழ்வு வளம் பெற்று தரம் உயரவும் மரங்கள் நிறைய உருவாக வேண்டும் அப்படி உருவானால் அதை ஒட்டி இருக்கும் கிராமங்கள் அதோடு சேர்ந்து வளர்ச்சி பெறும் இங்கு(நகரங்களில்) இருக்கும் இந்த ஜாதி மறுப்பு ஒழிப்பு வளர்ச்சி அங்கும் பரவும்.
திராவிட கருத்துக்களை பேசுவோம்!
திராவிடம் பழகுவோம்!
தமிழ் வாழ்க! தமிழ் வெல்லும்!
இப்படிக்கு,
அருண்
திராவிடன் குழு!
No Comments