திராவிட அரசியலில் ஆரம்ப புள்ளி
இவ்வளவு பிராமண ஆதிக்கத்தில் இருந்த தமிழ்நாட்டில் நீதிக்கட்சி மாநில ஆட்சியை பிடித்தது. திராவிட கருத்துக்களை கொண்ட தலைவர்கள் சேர்ந்து ஆட்சி அமைத்து அமைச்சரவையை அமைத்த்தால் பல புரட்சிகர திட்டங்கள் மட்டும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்!
அவர்கள் இயற்றிய ஒவ்வொரு சட்டமும் சமூகத்தில் இருந்த சமமின்மையை போக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும், இத்தனை காலமாக தங்கள் கண் கூட பார்த்து வந்த கொடுமைகளை அகற்றவும் பயன்பட்டது.
ஒரு சாரார் பக்கமே இருந்த கல்வி, உணவு விடுதிகள், பல்கலைக்கழக படிப்புகள், மருத்துவம்,வேலைவாய்ப்புஇன்று அனைத்து துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்டி அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது.நீதிக் கட்சியாக இருந்து உருமாறியது திராவிட கழகம். அரசியல் இயக்கமாக இருந்து பின்பு வாக்கு அரசியலில் இருந்து விலகி மக்களுக்கு கருத்துக்களை மட்டுமேஉருமாறி அதில் பெரியாருக்குப் பின்னர் தான்.
மாநில அரசு அமைத்த பின் நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான முத்தாய்ப்பான 10 அரசாணைகள், சட்டங்கள் இதோ!நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).
பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922) (அதுவரை அனைத்து அரசு குறிப்பேட்டில் அப்படித்தான் குறிப்பிட்டு வந்தனர்) கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922).
கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923).
புதிய பல்கலைக்கழகம் அமைக்கசட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).
குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).
கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).
சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).
எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928).
வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).
இந்த அரசாணைகளை பார்க்கும் பொழுதே நமக்கு ஒன்று நன்றாக புரியவரும் 90 ஆண்டுகளுக்கு முன்னரே எப்பேர்ப்பட்ட உயரிய சிந்தனைகளுடன் நடக்கும் அனைத்து கொடுமைகளையும் நீக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் சமூக நீதியை மனதில் வைத்து இயற்றிய சட்டங்கள் இவை.
திராவிட இயக்கங்கள் மற்றும் திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சி அமைத்து இயற்றிய இன்றளவு வரை சமூக நீதியை நிலை நாட்டும் சட்டங்கள் அனைதிற்கும் முன்னோடியான திட்ட அரசானைகள் இவை.
திராவிட இயக்கங்களின் வரலாறு அறிவோம்! திராவிடத்தை கற்பிப்போம்!
தமிழ் வாழ்க ! தமிழ் வெல்லும்!
– திராவிட கிறுக்கன்
No Comments