அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இணையத்தில் இணைந்த பிறகுதான் இத்தனை சாதனைகளை திராவிடம் செய்துள்ளதா? என்று எண்ணி வியந்து கொண்டு இருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞரை நாங்கள் படித்து தெரிந்து கொண்டது மிக குறைவுதான். ஆனால் வலைத்தளம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் ஒரு மாணவனாக.
இப்பயணம் இத்துடன் நின்றுவிடாமல் இருக்க ஒரு செயலியை வடிவமைத்து வருகிறோம்,அச்செயலியின் பெயர் “திராவிடம்” நம் செயலி பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, திராவிட சித்தாந்தங்களைப் பேசும். திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? என்று வரலாறு சான்று கூறும்.
அதற்குமுன் ஒரு தொடக்கம் தேவை என்ற காரணத்தினால், இந்த முயற்சியை கையில் எடுத்துக்கொண்டோம். இதில் வரும் லாபம் அனைத்தும் அந்த செயலியை உருவாக்க பயன்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம். இன்னும் புதிய படைப்போடு வருகிறோம், வாருங்கள் ஆதரவு தாருங்கள்!!
இப்படிக்கு,
உங்களைப்போல் ஒரு திராவிடன்